நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

குறள் 1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
நல் - நல்ல; வறுமை.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

ஒருவற்குத் - ஒரு மனிதனுக்கு

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

பிறந்த -  பிறவி; பிறப்பு; பாவம்; துன்பம்; பிறந்தகம்; இயல்பு.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை 

ஆக்கிக் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

கொளல் - அதனை கொள்ள வேண்டும்

முழுப்பொருள்
ஒரு நல்ல ஆளும் தன்மை என்பது எது தெரியுமா? தான் பிறந்த குடியை ஆளும் தன்மையை வலிமையை தான் முதலில் வளர்த்துக்கொண்டு அக்குடியை வழிநடத்தி அக்குடியில் உள்ளோரையும் அக்குடியையும் உயர்த்துவது நல்லாண்மை ஆகும். 

இங்கே குடி என்பது தான், தன்னுடைய குடும்பம், நண்பர்கள், குழு, நிர்வாகம், நாடு என்னும் அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். 

முதலில் தன்னை ஆள தெரிந்தவனே பிறரை ஆள முடியும். அடுத்து தன் குழு, குடியை ஆள தெரிந்தவனே பிற குழுவை குடும்பங்களை ஆள முடியும். 

தம்மைச் சார்ந்தவரையே தம் ஆளுமைக்கு உட்படுத்த முடியாதவரை ஆளுமை உடையவராகக் கொள்வது எங்கனம்? குடியினரை உயர்த்துவதாலேயே அது நல்லாண்மை என்றும் கூறப்படுகிறது.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

No comments:

Post a Comment