பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

குறள் 915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.

நலத்தார் - நலத்தல் - nala-   12 v. நன்-மை. intr. Toresult in good; to take a favourable turn; நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச. 9, 6).--tr. cf. நய¹-. To wish, desire;  

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

பொதுநலத்தார் - potu-nalattār   n. id.+. Prostitutes; பொதுமகளிர். பொதுநலத்தார்புன்னலந் தோயார் (குறள், 915).

புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார்

மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

நலத்தின் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

மாண்ட -மாண்(ணு)-தல் - மாட்சிமைப்படுதல், மிகுதல், நன்றாதல், 

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

அறிவினவர் - அறிவு உடையோர் 

முழுப்பொருள்
பல ஆண்கள் உடற்கின்பத்திற்காக செல்வம் கொடுத்து மனைவியாக ஏற்காமல் மறைவாக கூடும் பெண்களை பொதுமகளிர் என்பர். புணர்ச்சி இன்பத்திற்காக அத்தகைய பொதுமகளிரிடம் தன்னை எவ்விதத்திலும் ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பார்கள் இயற்கையான மனநலத்தையும் மாட்சிமை உடைய அறிவையும் உடையவர்கள். 

இயற்கையாக மனநலம் கொண்டோர் பொதுமகளிருடன் புன்னலத்தில் ஈடுபடமாட்டார். அப்படியெனில் பொதுமகளிருடன் ஈடுபடுபவர்கள் சமநிலை இழந்தவர்கள். நோய்வாய் பட்டவர்கள் மனநோய் கொண்டவர்கள் என்பதை நாம் இங்கு உணரலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார். (மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தௌ¤வு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்'என்றும்,அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார். இது புத்திமான் சேரானென்றது.

மு.வரதராசனார் உரை
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

சாலமன் பாப்பையா உரை
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

No comments:

Post a Comment