தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.

இலதனைத் - இல்லாதவனை

தொடங்குதல் - ஆரம்பித்தல்; முயலுதல்; ஒத்தல்.

தொடங்கார்- முயலமாட்டார் ; ஆரம்பிக்கமாட்டார் 

இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

ஏதப்பாடு - குற்றம்; குற்றம்உண்டாகுகை.

அஞ்சு - ஐந்து; அச்சம் ஒளி

அஞ்சுபவர் - பயப்படுபவர்

முழுப்பொருள்
தனக்கு ஒரு இகழ்ச்சி வந்தால் அதனை குற்றம் நடந்ததாக எண்ணுவோர் அவ்விகழ்ச்சியை அஞ்சுகின்றவர். அவர் அறத்தின் வழி நிற்பவர். தனக்கு இகழ்ச்சி வர கூடாது என்று முயல்பவர். இகழ்ச்சி வர கூடிய காரியங்களை செய்யமாட்டார். ஆதலால் ஒரு செயலை செய்தால் அதனால் நற்பயன்கள் விளையும் என்ற தெளிவு இல்லாமல் அறத்தின் வழி நின்று இகழ்ச்சிக்கு அஞ்சுகின்றவர் தெளிவில்லாமல் செயல்களை தொடங்கமாட்டார். 

”தெளிவு” என்பதை மிக முக்கியமாக நாம் இங்கு பார்க்க வேண்டும். ஏனெனில் எதற்காக இச்செயலை செய்கிறோம் என்ற தெளிவு மிக அவசியம். உதாரணமாக சொன்னால் மேற்படிப்பிற்கு படிக்கும் பொழுது ”Why MBA" (எதற்காக நிர்வாக மேலாண்மை மேற்படிப்பு படிக்க நினைக்கிறாய்?) என்ற ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி விண்ணப்பிக்க சொல்வர். அக்கேள்வியின் உள்ளர்த்தம் உன்னுடைய இலக்கு என்ன? இந்தப் மேற்படிப்பு எப்படி அதற்கு ஒரு கருவியாக இருக்கும் என்பதாகும். அத்தெளிவு உண்ணிடம் இருக்கிறாத என்று பார்க்கின்றனர். ஏனெனில் MBA படித்துவிட்டு Doctor ஆக முடியாது அள்ளவா? ஆதலால் நன்கு ஆராய்ந்து ஆழமான ஒரு பதில் வேண்டும். அப்பொழுது தான் தெளிவுப் பிறக்கும்.

ஒரு செயலை செய்யும் முன்பு நன்கு ஆராய வேண்டும். அதன் விளைவுகளை எண்ண வேண்டும். ஒரு செயலை செய்தால் (நல்வினை தீவினை ஆகிய) இரண்டு வகையான பயன்களும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். அச்செயலில் எதை செய்தால் தீவினை வரும் எதை செய்யாது இருந்தால் தீவினை வரும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஆதலால் செயல் செய்யும் முன்பே ஆராய்ந்து தீவினை விளையாது இருக்க ஆவனவற்றை செய்யவேண்டும். 

தீவிளைவுகள் என்றால் அது நஷ்டம் என்ற மட்டும் அளவில் நின்றுவிடாது. இவனுக்கு ஒரு செயலை ஆராய்ந்து செய்ய அறிவில்லை / துப்பில்லை என்ற இகழ்ச்சியும்  மற்றவர்களிடம் இருந்து வரும். ஆதலால் இளிவு என்று கூறினார் வள்ளுவர்.

ஒரு செயலை செய்தால் தோல்வி என்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அத்தோல்வி இயற்கையாக அமைந்தால் அதில் இருந்து கற்கலாம். சில சமயம் தவறுகளால் கூட கற்கலாம். If we tried sincerely "Failure can be worn as a badge of honor". ஆனால் அலட்சியத்தால் சோம்பேறிதனத்தால் ஆராயாமல் ஒருவர் தவறு செய்தால் அல்லது தோல்வியை தழுவ நேரிட்டால் அதனை எல்லோரும் இகழுவர். 

இதையே இன்னா நாற்பது, “தேற்றம் இலாதான் துணிவு இன்னா” (தேற்றம் – தெளிவு) என்கிறது. 

“ஒன்றூக்கி ஒன்றிழைத்தல் உணர்வுடைமைக் குரித்தன்றால்” (கம்ப.ஊர்தேடு.221)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.
(தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தௌ¤வுள் வழித் தொடங்குக என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

மு.வரதராசனார் உரை
கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

No comments:

Post a Comment