உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

குறள் 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

உடையவர் - ஆன்மாக்களை அடிமையாக உடையவர்; சுவாமி ஆன்மார்த்தலிங்கம்; செல்வர் இராமானுசர்;

உடையவர் - uṭaiyavar   n. உடைமை Hon. pl. 1. Master, lord; சுவாமி உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம் 3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர் (ஈடு, 10, 7, 1.) 

உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

முன் - முன்பு; முன்னே; இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

இல்லார் - இல்லாதவர்

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

ஏக்கற்றும் ஏக்கறுதல் - இளைத்துஇடைதல்; ஆசையால்தாழ்ந்துநிற்றல்; விரும்புதல்.

கற்றார் - கற்றவர்கள் ;சான்றோர்

கடையரே - கடையர் - கீழானவர், இழிந்தோர்; மருதநிலத்தவர்; வாயிற்காப்போர்; பள்ளருள்ஒருவகுப்பார்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

கல்லாதவர் - கற்காதவர்

முழுப்பொருள்
செல்வந்தர்கள் முன்பும் கொடையாளிகள் முன்பும் தன் தேவைக்காக யாசகம் செய்யும் வறியவர்கள் போல அறிவிற்சிறந்த சான்றோர்களிடம் கற்க விரும்பி ஆசையாக அவர்களிடம் தாழ்ந்து/பணிந்து நின்று கற்பவர் கற்றார் எனப்படுவார்கள். மாறாக விரும்பியும் பணிந்தும் கற்காதவர்கள் கீழோர் ஆவர். 

கற்காதவர்கள் யாசித்தாவது கற்க வேண்டும். அப்படி தான் தன்னுடைய அறியாமை என்னும் இருளில் இருந்து வெளிவர முடியும். அப்படி கற்கவில்லையென்றால் அறியாமை என்னும் இருளில் துன்பப்படும் கீழோர் எனவே கருதப்படும்.

மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்ற வாக்கினை நினைவில் கொள்ளவும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.

இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

மு.வரதராசனார் உரை
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா உரை
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
When in extreme poverty, one would beg for food from people who can provide food. When a person (irrespective of any factors such as age, experience, titles etc) is having knowledge, experience, ideas, suggestions, etc then listen to and learn from him/her as though you don't have the knowledge. All it matters is 1) having ears to listen 2) having the appetite to learn. Such persons are learned person or learners. However, the person would be considered stupid if he/she lives within his/her shell (and in darkness) and has an attitude of why should I learn from the other person. Also, remember schools and universities can only teach a limited knowledge. Self education through reading, listening to people, debates, discussions only would help a person for the long run.

Questions that I ask to the kid
How should knowledgeable people learn? When is a literate people is considered stupid ?

No comments:

Post a Comment