தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீப் - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

பால - தரக்கூடியவற்றை

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

பிறர் - Outsiders, strangers;அன்னியர்.; அயலார்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

நோய்ப் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பால - விளையும்

தன்னை -  தன்னைப் பற்றி; தான்;  தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டாதான் - வேண்டாதவன்

முழுப்பொருள்
பகை, கொலை, துன்பம் ஆகியவற்றை நோயென கருதி அவற்றை விரும்பாதவன், பிறருக்கு தீயச்செயல்களை தீது விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது. ஏனெனில் நீ பிறருக்கு செய்த தீச்செயல் உண்மையிலேயே தீவினை. அத்தீவினை உன்னை வந்து தாக்கும். ஆதலால் உன்னை தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் பிறருக்கு தீயவற்றை செய்யாதே.

நீ ஒன்றை அருவருத்தால் அதனை மற்றவர்களுக்கு கொடுக்காதே. நீ பிறருக்கு ஒன்றை கொடுத்தால் அதனை பிறர் உனக்கு கொடுக்க நேரிடும். அதனை ஏற்க ஆயுத்தமாக இருக்கு.

தமக்கு துன்பம் வரும் என்ற சுயநல காரணத்துக்காகவாவது, பிறருக்குத் தீமை செய்யாதே.

கலித்தொகைப் பாடல் : “ஈதலின் குறைவு காட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல” என்று கூறும். அறனறிந்து ஒழுகிய தீதிலான் என்று சொல்வதோடு நில்லாமல், அதனால் வருவது செல்வம் என்றதனால் அதுவே தீவினையற்று இருத்தலுக்கு ஒரு ஊக்கியாகிறது. அதேபோல, தீவினை செய்வதால் துன்பம் வரும் என்பதால் தீவினை விலக்கலுக்கு ஊக்கியாகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

No comments:

Post a Comment