நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

குறள் 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
நாம் - அச்சம்; தன்மைப்பன்மைப்பெயர்; தாங்கள்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

கொண்டார் - உடையவர்

நமக்கு - நம்முடைய, நமக்கு, நம்மை, etc. see நாம்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

செய்பவோ - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

கொள்ளாக் - கொள்ளார் - koḷḷār   n. id. + id. 1.Envious persons; மனம் பொறாதவர். பொறாதாரைக்கொள்ளாரென்பவாகலின் (தொல். பொ 147, உரை).2. Enemies, foes; பகைவர். கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும் (தொல். பொ 67).

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
தலைவி தலைவனை பிரிந்து இருக்கும் சூழலாக இருக்க வேண்டும். தலைவன் தன்னை பிரிந்துள்ளதால் தன்மேல் காதல் இல்லை என்று நினைக்கிறாள் தலைவி.

ஆதலால் அவள் இப்படி நினைக்கிறாள் "நான் யார் மேல் காதல் கொண்டேனோ அவர் என்னை விரும்பவில்லை ஆதலால் அவர் எனக்கு என்ன செய்து விட போகிறார்? அல்லது என்ன மகிழ்ச்சியை தந்துவிட போகிறார்? அப்படி இருந்திருந்தால் அவர் என்னை விட்டு பிரிந்திருக்க மாட்டார். துன்பம் என்மேல் படர்ந்திருக்காது. நான் மட்டும் அவரை காதலிப்பதால், அவர் நினைப்பாங்க இருப்பதால், ஒரு பயனும் இல்லை. இருவரும் மகிழ்ச்சியாக இருக்க அவருக்கும்(தலைவனுக்கும்) இருக்க வேண்டும் அவ்வெண்ணம் என்று கூறாமல் கூறுகிறாள் தலைவி?"

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து

மு.வரதராசனார் உரை
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.

சாலமன் பாப்பையா உரை
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?.

2 comments:

  1. தலைவி தலைவனை பிரிந்து இருக்கும் சூழலாக இருக்க வேண்டும்
    இந்தக் குறிப்பு அருமை.
    பாடல் கைக்கிளை அன்று என்பதை விளக்கும் குறிப்பு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்,



      உங்களின் வாழ்த்துக்கள் மிக்க நன்றி.

      உங்களை அர்ப்பணிப்பு உள்ளோரின் இத்தகைய கருத்துக்கள் எனக்கு நல்ல ஒரு உந்துதலாக இருக்கிறது. நான் செல்லும் திசை சரி என்ற நம்பிக்கையையும் தருகிறது மேலும் என் தளத்தில் உங்களின் பார்வை எனக்கு கூடுதல் கவனும் பொறுப்பும் தருகிறது.



      அன்புடன்

      ராஜேஷ்

      Delete