தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

குறள் 1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
[பொருட்பால்,  குடியியல்,  கயமை]

பொருள்
தேவர் - கடவுளர்; நால்வகைத்தேவவகையார்; ஐவகைத்தெய்வசாதியினர்; திருவள்ளுவர்; திருத்தக்கதேவர்; உயர்ந்தோரைக்குறிக்கும்சொல்; அரசர்துறவியர்முதலியோருடையசிறப்புப்பெயர்; முக்குலத்தோரின்பட்டப்பெயர்.

அனையர் -  They are like. அன்னர்--அன்னார். Such persons

கயவர் - கீழ்மையானவர்; கீழ்மையான செயல்களை செய்பவர்

அவரும் - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

மேவன - மேவு - விருப்பம்; மேம்பாடு.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆன் - ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)

ஒழுகலான் -  நடந்துக்கொள்பவன்

முழுப்பொருள்
தேவர் என்றால் உயர்ந்தோர் என்றும் பொருள் உண்டு. தாம் விரும்பியவற்றை யாருடைய தலையிடுதலும் இன்றி செய்கின்றவர்கள் தேவர்கள்/உயர்ந்தோர்கள்.  அதைப்போன்றே கயவர்கள் தாம் விரும்பியவற்றை யாருடைய தலையிடுதலும் இன்றி செய்வார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் குறளில் சொன்னது அவ்வளவே. அவர் சொல்லாமல் சொன்னது. தேவர்களுக்கும் கயவர்களுக்கு ஒற்றுமை அவ்வளவே. தேவர்கள் நன்மை பயக்கும் செயல்களைப் புரிவர். கயவர்களோ கீழ்மையானவற்றை செய்வர். தேவர்கள் மிகுந்த உயரிடத்தில் வைத்துப் போற்றப்படுவர். கயவர்களோ துச்சப்படுவர். இந்த குறளை வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.

மு.வரதராசனார் உரை
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

No comments:

Post a Comment