பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

குறள் 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

தூக்கிப் - தூக்குதல் - tūkku-   5 v. tr. [T. tūkonu,K. tūgu, M. tūkkuka.] 1. To lift, lift up, raise,take up, hold up; to hoist, as a flag; உயர்த்துதல் மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகநா. 156). 2. [T.tūgu.] To weigh, balance; நிறுத்தல் செம்பொன் றூக்கி (திருவிளை. மாணிக்க. 84). 3. Toconsider, reflect, investigate; ஆராய்ச்சி செய்தல் துணைவலியுந் தூக்கிச் செயல் (குறள், 471). 4.To compare; ஒப்புநோக்குதல். அமரரோ டசுரர்போரைத் தூக்கினர் முனிவர் (கம்பரா. நாகபாச. 52).5. To have in view; to expect; மனத்திற் கொள்ளுதல் சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ்சூழ்ச்சி (கந்தபு. கயமுகனுற். 64). 6. To hang,suspend; தொங்கவிடுதல். மறுகுவிளக்குறுத்து மாலைதூக்கி (அகநா. 141). 7. See தூக்கிலிடு-. அக்குற்றவாளியைத் தூக்கினார்கள். 8. To lift up, as onefrom a pit; to lend a helping hand; கைகொடுத்துதவுதல். 9. To weigh anchor; நங்கூரம் வலித்தல் (W.) 10. [M. tūkkuka.] To shake, agitate,cause motion; அசைத்தல் வாடை தூக்க வணங்கியதாழை (கலித். 128)

தூக்கு - (வி)ஆராய்; உயர்த்து; நிறுத்து.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

உரைக்கும் - உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

உரைக்கும் - பேசுவது

உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு

மகளிர் - பெண்டிர், பெண்கள், மாதர்

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

தூக்கி - தூக்கு - (வி)ஆராய்; உயர்த்து; நிறுத்து.

நள்ளார் - பகைவர்.

நள்-(ளு)-தல் - [நட்டல்]   5 & 9 v.tr. cf. நளி². 1. To approach, join, associate with;அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங். 25). 2. To contract friendship, befriend;நட்புக்கொள்ளுதல். உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை (குறள், 812). 3. To like,accept; விரும்புதல் நள்ளாதிந்த நானிலம் (கம்பரா.கைகேசி. 26).

நள் - நடு; இரவு; உச்சிப்பொழுது; திருவோணநாள்; செறிவு.

நள்ளா - விரும்பாமல்

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்
விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
ஒருவரிடம் பழகினால் உறவுவைத்துக்கொண்டால் என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணி ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் இனிமையாகவோ அல்லது கடுமையாகவோ பேசும் இயல்புடைய பரத்தையர் (பாலியல் தொழில் செய்வோர்) ஆபத்தானவர்கள். அவர்களின் மேற்சொன்ன உண்மை இயல்பை ஆராய்ந்து அவரை விரும்பாது நட்புக்கொள்ளாது அவரை விட்டு விலகவேண்டும். அவர்களை விட்டு விலகுவதே நமக்கு நன்மை. அவர்களுடன் பழகுவது நமக்கு தீமை பயக்கும், இழப்புகள் பல நேரிடும்.

ஆத்திச்சூடியில் ஔவையார், “மைவிழியார் மனை அகல்” என்று சொல்லியிருப்பார். பரத்தையர் வீடு சேர்வதும், அங்கே இருப்பதும் தவறென்று ஒருவர் உணர்ந்து, அம்மனை நீங்கவேண்டும்


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக. (பண்பு, சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும் அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பதுதோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக. இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாம் தொகுத்துக் கூறினார்.

மு.வரதராசனார் உரை
கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.

No comments:

Post a Comment