குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]
பொருள்
கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.
கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல்.
கூற்றுதைத்தான் - யமனைக்காலால்உதைத்தசிவன்.
கூற்றத்தைக் - யமனை
கையால் - கைகளினால்
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்; அழித்தல்; கொல்லுதல்; பேராரவாரஞ்செய்தல்.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - தன்மை அறிந்து
ஆற்றுவார்க்கு - ஆற்றுவார் - செயலை செய்வார்கள் , எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர், தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள் , செய்வார்கள்; வலிமை அடைய செய்வார்கள்; உண்மையை தேடுவார்கள்;
ஆற்றாதார் - செயலை செய்யாதவர்கள்
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.
முழுப்பொருள்
செயல்களை ஆற்றுபவர்கள், தவம் ஆற்றுபவர்கள், வலிமையுடையவர்கள் என கருதப்படும் ஆற்றுவோர்க்கு ஒரு செயலையும் ஆற்றாத வலிமையில்லாதவர்கள் துன்பம் தரும் செயல்களை இகழ்ச்சி தரும் செயல்களை செய்தால் அது கீழ்மையாகும். அத்தகைய கீழ்மையை செய்வது அழிவைத் தரும் கொடும் பகைவனை (யமனை) யானையின் துதிக்கையால் விளித்து/அழைத்து அழிவைத் தேடிக்கொள்வதுப்போல் ஆகும்.
இக்கருத்தை ஒரு பழமொழிப் பாடல் அழகாகக் கூறுகிறது. அப்பாடல்:
வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில். (பழமொழி 33)
கொடும் சினத்தை உடைய அரசன், தமக்குக் கீழே வாழ்வார்க்குத் தீமையே செய்தாலும், அவன் மனத்தில் கறுவுகொள்ளத் தக்கனவற்றை, அவன்கீழ் வாழ்வார் சிறிதளவுகூட செய்ய வேண்டாம். எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்யுமென்ற புலி, தம்மிடத்து அகப்பட்டாலும், யாராவது, உறங்குகின்ற புலியை எழுப்புவார்களோ? என்கிறது இப்பாடல்.

“எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்லின்
....... எருக்கு, மறைந்தியானை காய்ந்து விடல்” (பழமொழி 376)
“”காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா” (சீவக.2148)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

No comments:
Post a Comment