சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
சீர்மை - சிறப்பு; புகழ்; கனம்; அளவிற்படுகை; வழவழப்பு; காண்க:சீமை; நன்னடை.

சிறப்பொடு - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

நீங்கும் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லை ; இல்லாதவற்றை

நீர்மை - நீரின்தன்மை; தன்மை; சிறந்தகுணம்; எளிமை; அழகு; ஒளி; நிலைமை; ஒப்புரவு.

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

சொலின்சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
ஒருவர் கற்றறிந்தவர்கள் முன்பு சான்றோர்கள் முன்பு பயனற்றவற்றை பேசினால் அவருடைய குணத்தினால் ஈன்ற புகழும் அவர் ஈன்றப் பெருமையையும் மதிப்பும் அங்கு நீங்கிவிடும். ஆதலால் பலர் கூடியிருக்கும் அவையிலேப் பயனல்லாதவற்றைப் பேசக்கூடாது.

ஏனெனில் இவர் பெரியோர் (சான்றோர்) என்று நினைத்தோமே ஆனால் இவரோ இப்படிப்பட்ட பயனல்லாதவற்றை பேசுகிறாரே என்று உலகம் பேசும். ஆதலால் அங்கே அவர் புகழ் அழிந்துவிடும்.

உண்மையை பேசுவதால் ஒரு பெருமை வரும். பொய்ப்பேசாமல் இருப்பதால் ஒரு பெருமை வரும். புறம்பேசாமல் இருப்பதால் ஒரு பெருமை உண்டு. ஆனால் பயனல்லாதவற்றைப் பேசினால் பெருமை நீங்கிவிடும். ஆதலால் பயனல்லாதவற்றைப் பேசாமல் நம்மிடம் சிறிதாயினும் பெரிதாயினும் இருக்கும் புகழையும் பெருமையும் காத்துக்கொள்ளவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”சிறப்பும் சீரும் இன்றி” (அகநா 369:22)

பரிமேலழகர் உரை
பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

மு.வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

No comments:

Post a Comment