அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி

குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி
அழிவதூஉம் - அழிவது - கெடுதி.

அழி-தல் - aḻi-   4 v. intr. [K. M. aḻi.]1. To perish, to be ruined; நாசமாதல். 2.To decay, to be mutilated; சிதைவுறுதல்.ஆரவண்டலழியும் (நைடத. கைக்கி. 10). 3. To fail,to be frustrated; தவறுதல் நீயுரைத்த தொன்றுமழிந்திலது (கம்பரா. பிராட்டி 30). 4. To becomeunsettled, to lose standing; நிலைகெடுதல் அழிந்தகுடி. 5. To be defeated; தோற்றல் வாதி லழிந்தெழுந்த (தேவா. 859, 3). 6. To melt with love மனம் உருகுதல் 7. To suffer, to be troubled;வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்(தொல். பொ 150). 8. To be disheartened; மனம்உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா. நகர்நீங்கு.18) 9. To swell, increase; பெருகுதல் அழியும்புன லஞ்சன மாநதியே (சீவக. 1193). 10. Tosympathise with; பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல். பொ 40).11. To be spent, used up, sold out, exhausted;செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்துவிட்டது. 

ஆவதூஉம் - ஆவது - ஆகவேண்டியது; விகற்பப்பொருள்தரும்ஓரிடைச்சொல்; விவரம்பின்வருதலைக்குறிக்குஞ்சொல்; எண்ணொடுவருஞ்சொல்.

ஆகி - ஆகுதல் - ஆதல்.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

ஊதியமும்  - ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்

சூழ்ந்து - சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை துவங்கும் முன் நாம் ஆற்றவேண்டியவற்றை வரையறை செய்கிறார் திருவள்ளுவர்.

1. அச்செயலில் நடக்கக்கூடிய தவறுகள், செலவுகள், அச்செயலினால் வரக்கூடிய (நற்பெயர், பொருள், செல்வம், நேரம்) நஷ்டங்கள், அழிவுகள் ஆகியவற்றை கணக்கிட வேண்டும். ஒரு புதிய செயலையோ அல்லது புதிய ஒரு தொழிலையோ/வியாபரத்தையும் துவங்கமும் பொழுது முதலில் பல காரியங்களுக்காக குறிப்பாக பொருள்கள் வாங்குவதற்கும் ஊதியம் கொடுப்பதற்கும் செலவு ஆகும். அதனால் தான் அழிவதூஉம் என்று முதலில் அதனை கணக்கிட சொல்கிறார் திருவள்ளுவர்.

2. அச்செயல் வெற்றிப்பெற தேவையான மெனக்கெடல்கள், யுக்திகள்/வியூகங்கள், மக்கள், செல்வம், உழைப்பு, திறன், நேரம், கால அவகாசம் ஆகியவற்றை கணக்கிட வேண்டும்

3. வழி பயக்கும் ஊதியம் - துவக்கத்தில் நஷ்டம் வரலாம் ஆனால் வருங்காலத்தில் வரக்கூடிய இலாபத்தை ஒரு வியாபாரம்/செயல் ஈட்ட வேண்டும்.

4. அச்செயலினால் நாம் அடையக்கூடிய ஆதாயம் மற்றும் நஷ்டத்தை கணக்கிட வேண்டும். சூழ்ந்து /கருதி செயல் வேண்டும் என்கிறார். அதாவது இலாபம் வருமா என்பதனை கருதி செய்தல் வேண்டும். நிகழ்காலத்தில் இலாபம் குறைவாகவோ அல்லது நஷ்டமாகவோ இருக்கக்கூடும். ஆனால் சில காலத்தில் நஷ்டத்தை ஈடுகட்டிய இலாபம் வரவேண்டும். 

MBA-வில் Finance பாடம் படிப்பவர்களுகு முதலாவது பாலப்பாடமே NPV (Net Present Value) தான். அதில் வியாபரத்தில் முதல் ஆண்டு நஷ்டமாக இருக்கலாம். ஆனால் முதல் மூன்று ஆண்டுகளுக்கான இலாபத்தின் NPV மூன்று ஆண்டுகளுக்கான சராசரி இலாப அளவை அடைக்கூடியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய வியாபரத்தை மட்டுமே நாம் செய்தல் வேண்டும். இல்லையேல் அந்த வியாபரத்தை விட்டுவிடுதல் வேண்டும். ஏனெனில் அதில் பணம் விரயம், நேர விரயம், உழைப்பு / ஆற்றல் விரயம்.  

மேற்சொன்ன நான்கையும் தன்னுடைய (திறன் வாய்ந்த) சுற்றத்துடன் கலந்து ஆலோசித்து ஆதாயம் தரக்கூடியவற்றை தக்க தற்காப்புகளை எடுத்துக்கொண்டு தீட்டிய திட்டத்தின்படி செயலாற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

MBA படிப்பர்வர்களுக்கு தெரியும் அவர்கள் consulting case இல் முதலில் கற்பது Profit/Loss = Revenues - Cost (இலாபம்/நஷ்டம் = வரவு - செலவு) என்ற model-ஐ முதலில் கற்பார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.
(உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம'¢ என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.

மு.வரதராசனார் உரை
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.


Thirukkural - Management - Decision Making
In addition to the five weapons suggested in Kural 675, Kural 461 suggests that before we start a task, we need to assess the possible positive and negative outcomes and the resources needed in the process of getting that outcome and the benefits that will come because of the positive outcomes.

Act after taking into account 
The cost, the benefit and the net.

No comments:

Post a Comment