புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

கூறி - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

பொய்த்து பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்தலின் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).  


அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

கூற்றும் - கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

தரும் - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள் 
பொதுவாக தற்கொலை போன்றவை கொழைத்தனம் என்று நாம் சொல்வோம். ஆனால் அப்படிப்பட்ட இறப்பு உயர்வு தருமா? இறப்பு/தற்கொலை சிறந்தது ஆகுமா? அப்படியானால் எப்பொழுது? 

தற்கொலை சிறந்ததாகும் என்று அறம் கூறும் நூல்கள் கூறுவதாக திருவள்ளுவர் கூறுகிறார். எப்பொழுது? பிறரை பற்றி புறத்தில் தீங்கை கூறி கண் முன்னே பழகும் பொழுது பொய்யாக இனியவர் போல் பேசுவதும் பழகுவதை காட்டிலும் சாதல் சிறந்தது.  ஏனெனில் முகத்துக்கு நேரே கூற தைரியம் இல்லாத நேர்மை இல்லாத கோழைத்தனம் புறம் பேசுவது ஆகும். அதனை போன்ற கீழ்மையான செயல் வேறெதுவும் இல்லை. புறம் பேசுபவர்கள் நோயினை பாய்ச்சும் கிருமிகளை போன்றவர்கள். இவர்கள் ஆபத்தானவர்கள். இவர்கள் உயிர்வாழ்வதை விட இறப்பதே இவ்வுலகிற்கு செய்யக்கூடிய நன்மையாகும். அதனால் தான் அற நூல்கள் புறம் கூறுபவர்கள் இறந்தால் அது இவ்வுலகிற்கு நன்மையே (அதாவது ஆக்கம் தரும்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.).

மணக்குடவர் உரை
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

மு.வரதராசனார் உரை
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

No comments:

Post a Comment