குறள் 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
ஒல்லும் - ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.
வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.
வகை-தல் - vakai- 4 v. வகை. intr.To be divided; பிரிவுபடுதல்.--tr. 1. To arrange a subject; வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும்வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. To divide; to cut; வகிர்தல். வாளை யீர்ந்தடி வல்லிதின்வகைஇ (நற். 120). 3. [T. vagatsu.] To consider,weigh; ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி. 16).
வகையான் - வழிகளில் / முறை எல்லாம் ஒருவன்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
வினை - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
அறவினை - நேர்மையான தொழில்
ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்.
ஓவாதே - நீங்காது
செல்லும் - செல்லுதல் -நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.
எல்லாம் - முழுதும்
செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு
முழுப்பொருள்
ஒல்லுதல் என்றால் இயன்ற என்று பொருள். ஒல்லுதல் என்றால் விரைதல் என்றும் பொருள். மற்ற பொருள்களும் உண்டு. இவ்விரண்டையும் நாம் எடுத்துக்கொள்வோம் இங்கு.
வகை என்றால் முறை அல்லது வழி என்ற பொருள்களை எடுத்துக்கொள்வோம்.
இயன்ற வழிகளில் (முறைகளில்) எல்லாம் அறவழியில் (நேர்மையான வழியில்) நீங்காமல் எந்த காரணமும் இன்றி எல்லா புலன்களின் மூலமாகவும் செயலை செய்க. அதாவது எந்த வித நொண்டி சாக்கும் சொல்லாமல் எல்லா நேரங்களிலும் எல்லா முறையிலும் எல்லா புலன்களாலும் அறவழியில் செயல்களை செய்க. ஒல்லுதல் என்றால் விரைதல் என்ற பொருளும் உண்டு. ஆதலால் காலம் தாழ்த்தாது அறச்செயல்களை செய்க என்றும் நாம் கொள்ளலாம். காலத்தில் செய்யாத செயல் தகுந்த பலனை தராது.

ஒருவர் திருக்குறளை கற்றுக்கொண்டு வெறுமென அறிந்துக்கொண்டே இருப்பதால் ஒருபயனும் இல்லை. எல்லா செயல்களிலும் எல்லா நேரங்களிலும் அறத்தைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது. செயல் மூன்றுவகைப்படும் - மனதால், சொல்லால், (உடம்பால்) செயலால். ஆதலால் மூன்று வகையிலும் அறம் செய். (Do your duties by by thoughts, words, deeds with integrity)
‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்ற தொன்மொழி ஒன்றுண்டு. இது, ராவணனுக்கு சீதை பிச்சையளித்ததையும், அதனால் நிகழ்ந்த பின் விளைவுகளையும் மனதில் கொண்டு சொல்லப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், அவள் செய்த நல்ல காரியமே அவளுக்கு துன்பச் சிறையை தந்து ராமனிடமிருந்து பிரிவையும் தந்தது. ஆனால் அவள் அறவழி நின்றதாலேயே ராவாணசுர அழிவு என்கிற நல்லதும் நடந்தது என்ற உண்மையே நம் உள்ளத்தில் தைக்கவேண்டும். அதனால் சில சமயங்களில் அறன்வழிகளால், உடன்வரும் துன்பங்களால் துவளாதிருந்தால், முடிவில் நல்லதே நடக்கும் என்பதன் கருத்தே இது.

ஒப்புமை
“ஒல்லும் வகையான், மருவுமின் மாண்டார் அறம்” (நாலடி 36)
“இம்மி அரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இசைவ கொடுத்துண்மின்” (நாலடி 94)
“மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றிசைவ கொடுத்தல்” (நாலடி 95)
“எத்துணை யானும் இயன்ற அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்” (நாலடி 272)
“ஆற்றுந் துணையால் அறஞ்செய்க முன்னினிதே” (இனியவை 7)
“ஆற்றும் துணையும் அறஞ்செய்க”
“ஒன்றும் வகையால் அறஞ்செய்க” (பழமொழி 137, 303)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.
மு.வரதராசனார் உரை
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
முடிந்தவரை நல்லதை மட்டுமே செய்.
No comments:
Post a Comment