இன்மை எனவொரு பாவி

குறள் 1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு- வறுமை

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

பாவி - தீமையாளன்; சாது; வரக்கூடியது; பேதை.
பாவி - (வி)மதி; பாவனைசெய்.

மறுமையும் - மறுபிறவி; மறுவுலகம்.

இம்மையும் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.

இன்றி - இல்லாமல்

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
வறுமை என்னும் ஒரு தீமை ஒருவன் வாழ்விலே வந்துவிட்டால் அது இந்த பிறவியாக இருந்தாலும் மறுபிறவியாக இருந்தாலும் இனிமை இல்லாமல் தான்  வரும். அதாவது எந்த ஒரு பிறப்பிலும் வறுமை வந்துவிட்டால் அது இன்பம் இல்லாமல் தான் வரும். இன்பம் இல்லாத நிலையே வறுமை என்றும் நாம் உணரலாம். வறுமையில் பிறருக்கு கொடுத்து உதவவும் முடியாதவற்றவராகிவிடுவோம். மனதில் இன்பம் இல்லை என்றால் நமக்கு மோட்சமும் இல்லை.

ஆதலால் ஒருவன் அவனுடைய அறத்தை செய்து பொருள் ஈட்ட வேண்டும். வறுமை வந்து விட்டால் இன்பம் பொய் விடும். அதனால் தான் அறம் பொருள் இன்பம் வீடு என்று கூறுகின்றார்கள்.

அது மட்டும் இன்றி நம் மனதில் வறுமை இருக்கா கூடாது. அதாவது நாம் பிறருக்கு செய்த நல்ல காரியங்களை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய முடிந்தால் நமக்கு இன்பம். அப்படி நினைக்க முடியாத அளவிற்கு நாம் சுயநலமாக இருந்திருந்தால் நாம் வறுமையில் இருக்கிறோம் என்று உணரலாம். அவ்வெண்ணம் நம் எல்லா இன்பத்தையும் எடுத்துச்சென்றுவிடும். 

"துன்பம் இல்லாத நிலையே ஷக்தி" போன்று "வறுமை என்ற நிலையில் இன்பம் இல்லை"

அருளுடைமை அதிகாரத்தில் ஏற்கனவே 
“பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு”, (குறள் 247) என்று கூறி வறிஞர்க்கு இம்மை இல்லையென்று கூறியுள்ளார். 

குறுந்தொகைப் பாடலொன்றும், 
“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்” (63:1)
“இல்லோன் இன்பம் காமுற் றாஅங்
கரிதுவேட் டனையால்” (குறந் 120:11,2) 
என்று கூறுகிறது.

பசிப்பிணி என்னும் பாவி” (மணி 11:80)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.

மணக்குடவர் உரை
நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

No comments:

Post a Comment