குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
பொருள்
ஆள்வினையும் - முயற்சி; மகிழ்ச்சி
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
அறிவும் - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.
இரண்டின் - இவை இரண்டின்
நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
வினையான் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
நீளும் - நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீள் -நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
முழுப்பொருள்
ஒருவருடைய முயற்சியும் ஆழ்ந்த அகன்ற அறிவும் ஒரு செயலின் வெற்றிக்கு மிக அவசியம். அவ்வாறு முயற்சியும் அறிவும் கொண்டு ஒருவர் நெடுங்காலம் தன் செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தால் அவருடைய குடும்பம் நீண்ட நாட்கள் புகழுடன் விளங்கும். இது நாட்டிற்கும் பொருந்தும். எந்த நாடு இடைவிடாத முயற்சியும் அறிவும் உடையதோ அந்த நாடு பல நூற்றாண்டுகள் முன்னேறும் அதன் நல்ல பயன்களையும் அனுபவிக்கும்.
இங்கே பார்க்க வேண்டியது சில
1. முயற்சி என்பதை முதலில் சொல்கிறார் திருவள்ளுவர். அறிவென்பதை அதற்கு அடுத்து தான் சொல்கிறார்.
2. வினை என்று சொல்லமால் நீள்வினை என்று சொல்கிறார் . முயற்சியும் அறிவும் செயலில் நெடுங்காலம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குடியின் வளர்ச்சியும் பயனும் பல காலம் இருக்கும். சில காலம் மட்டும் ஒரு செயலை நன்கு செய்தால் அதன் பயன் உண்டு எனினும் குடியின் புகழ் பல காலம் நிலைக்க வேண்டும் என்றால் நாம் ஆற்றும் செயலும் நெடுங்காலம் இருக்க வேண்டும்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.
மு.வரதராசனார் உரை
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

No comments:
Post a Comment