அடுக்கிய கோடி பெறினும்

குறள் 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
அடுக்கிய - அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு, வரிசை, அடுக்குச்சொல்.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறினும் - பெற்றாலும் ; அடைந்தாலும்

குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்

குன்றுவ - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

இலர் - இல்லை ;  who are not

முழுப்பொருள்
எண்ணற்ற பல செல்வங்களை ஈன்று பெற்றாலும் வாழ்விலே பொருளாதாரரீதியாக மிக உயர்ந்தாலும் மாட்சிமை பொருந்திய ஒழுக்கத்துடன் வாழும் நல்ல குடியில் பிறந்தவர்கள் எந்நாளும் கேடான செயல்களை, தன் குடியின் புகழை குறைக்க கூடிய செயலை செய்ய மாட்டார்கள்.

இதனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் பிள்ளைகளை நல்வழியில் வளர்ப்பதும் பிள்ளைகளை ஒருகாலம் வரையில் கேடான செயல்களை செய்யாது பார்த்துக்கொள்வதும் பெற்றோரின் கடமையாகும். அவர்களை நல்வழில் வளர்ப்பதும் அவர்களுக்கு நல்ல ஒரு சூழலை கொடுப்பதும் அவர்களின் பொறுப்பாகும். இவற்றையெல்லாம் மீறி குழந்தைகள் சென்றால் அதனுடைய பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள்.

நல்ல குடியில் பிறந்தவர்கள் (மற்ற எல்லோரும்) அதனால் தான் நீத்தார் கடன் செய்வார்கள். இவர்கள் நல்ல நிலையில் இன்று இருந்தால் அதற்கு அவர்களின் பங்கும் உண்டு.

உயர் குடியில் பிறக்கவில்லை என்றாலும் வாழ்வில் உயர்குடி என்ற நிலைக்கு உயர வேண்டும் என்றால் அவர் கேடான செயல்களை செய்யக்கூடாது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..................தெள்ளி, வடுவான வாராமல் காத்தல்” (திரி.77)


பரிமேலழகர் உரை
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.).

மணக்குடவர் உரை
பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.

மு.வரதராசனார் உரை
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

No comments:

Post a Comment