கருமம் செயஒருவன் கைதூவேன்

குறள் 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் 
பெருமையின் பீடுடையது இல்
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

செய - செய்தல்

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.ஒருத்தன்

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
கை - kai   part. 1. Suffix at the end ofverbal nouns as செய்கை தொழிற்பெயர் விகுதி 2. Auxiliary prefix to verbs, as in கையிகந்து. ஓர்தமிழுபசருக்கம்.

தூ - tū   VII. v. t. send away, cause to go, செலுத்து.
துரப்பு, துரத்தல், v. n. driving, causing to go; 2. emission, discharging, விடுகை; 3. scaring away, dispelling, அகற்றுதல்.

கைதூவேன் - செய்கையில் அகலமாட்டேன்; ஓயாமல் செய்வேன்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

பெருமையின் - பெருமை எல்லாவற்றிலும்

பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.

உடையது -  கொண்டது

இல் - வேறு இல்லை; மற்றொன்று இல்லை

முழுப்பொருள்
தன் குடியின் (குடும்பம், நாடு, சமூகம்) பெருமை (புகழ்) ஓங்குவதற்கான ஒரு செயலை பெருமை அடையும் வரை அச்செய்கையில் இருந்து ஓயமாட்டேன் என்று சங்கல்பம் ஏற்றுக்கொண்டு அதற்காக உழைத்து இறுதியில் அடையும் பெருமை என்பது அவன் அடைந்த எல்லா பெருமைகளிலும் பெரிய பெருமையாகும். அதைப்போன்ற பெருமை வேறேதுமில்லை.

ஒருவன் தன்னுடைய பெருமைக்காக உழைக்கலாம். அதுவும் புகழ். ஆனால் தான் செய்யும் செயல் தன் குடியிற்கே பெருமையை தரும் என்றால் அதுவே அவன் அடைந்த பெருமையான எல்லாவற்றிலும் பெருமையாகும்.

உதாரணமாக கூகுல் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சுந்தர் பிச்சை அவர்கள் தன்னுடைய நாட்டிற்கே புகழை சேர்த்துள்ளார்.

சுந்தர் பிச்சை

மகாத்மா காந்தி அவர்களும் இந்தியநாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க அரும்பாடுபட்டார். பிறதேசத்து தலைவர்கள் வன்முறையில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முப்பது கோடி மக்களை ஒருங்கினைத்து அறவழியில் நடத்தி அஹிம்சை முறையில் சுதந்திரம் வாங்கிக்கொடுத்து அஹிம்சையின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டாக காண்பித்தவர் மகாத்மா காந்தி. அவரால் இந்திய நாட்டிற்கே பெருமை.

மகாத்மா காந்தி

ஒப்புமை:
”கருமம் மறுத்த கைதூ அமையத்து” (பெருங் 1.36:42)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , ஒருவன் தான் பிறந்த குடியை உயரச் செய்தலின் திறம் .இது தாழ்வின்கண் நாணுதலுடையார்க்கு உளதாவது ஆகலின் , நாணுடைமையின் பின் வைக்கப்பட்டது .]
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. ('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை 
ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.

மு.வரதராசனார் உரை
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person 1) vows (to himself/herself or to his/her family or his/her nation) that he/she will work to fulfill his/her responsibilities (bestowed upon him/her) and lift his/her family or nation, and 2) works towards the goals and accomplishes those goals and lifts the family/nation, then it is nothing but greatness. There is nothing more greater than that. Because it is normal for a person to work selfishly for himself/herself alone. But, if he/she selflessly works to uplift others then it is real great thing. People like Mahakavi Bharathiyar, Mahatma Gandhi rose above themselves and worked to lift the spirits of entire nation. 

Questions that I ask to the kid
Is there any greatness like that of doing your duties and lifting your family?

No comments:

Post a Comment