முகம்நோக்கி நிற்க அமையும்

குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி 
உற்ற துணர்வார்ப் பெறின்
[பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள்
முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.
நோக்கி - பார்த்து
நிற்க -நடக்க வேண்டும், பயில வேண்டும்; நில்
அமையும் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
நோக்கி - பார்த்து
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உணர்வார்ப் - உணர்வு - உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  
பெறின் - பெற்றால்

முழுப்பொருள்
அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பது நாம் அறிந்த வாய்மொழி. ஆனால் அது எல்லோருக்கும் புரிவதில்லை என்பதே உண்மை.

நாம் மனதிற்குள் நினைப்பவற்றை வாய்வழியாக சொல்ல தயக்கம் கொள்வோம். அல்லது சொல்ல மாட்டோம். பிறர் சோர்ந்துவிட கூடாது என்று சொல்ல மாட்டோம். நம்முடைய நிலை பிறருக்கு தெரியக் கூடாது என்பதற்காக ஒரு வேடம் இட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போன்று நடந்துக்கொள்வோம். ஆனால் எவ்வளவு நடித்தாலும் நம் அகம் ஓரிடத்திலாவது காட்டிக்கொடுத்துவிடும். இது சோர்வான தருணங்களுக்கு மட்டும் அல்ல, மனதில் சில நேரம் சிலர் வஞ்சகமா நினைப்பர், பொறாமை படுவர், கோபம் கொள்வர். ஆதலால் இவர்களின் முகத்தில் இருந்து அதனை அறிந்துக்கொள்வது மிக கடினம். ஆனால் முடியாதது அன்று.

ஆதலால் மற்றவர் முகத்தை மட்டும் நோக்கி அவர் உள்ளதில் இருக்கும் உண்மையான எண்ணங்களை குறிப்பறிந்து ஒருவரால் உணரமுடியும் என்றால் அப்படி பட்டவரை நம்முடன் உறுதுணையாக பேற்றால் மிக சிறந்தது. இங்கே முக்கியமான ஒன்று உணர்தல். உண்மை அறிந்துக்கொள்ளுதல் மட்டும் போதாது. அதனுடைய பொருள், வலி ஆகியவற்றை உணரக்கூடிய கண்ணோட்டமும், பிறரிடத்தில் அன்பும் வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க் கற்றந்தான்
வார்த்தையின் உணர்த்துதல் அரிதன் றோமனம்
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள்
பார்த்தனள் ஒருத்திதன் பாங்க னாளையே” (கம்ப.உண்டாட்டு.54)

“கண்டபின் இளைய வீரன் முகத்தினாற் கருத்தை யோர்ந்த
புண்டரி கக்க ணானும்” (கம்ப.உருக்காட்டு.76)

பரிமேலழகர் உரை
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகத்தை நோக்கி நிற்க அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின். இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

சாலமன் பாப்பையா உரை
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

No comments:

Post a Comment