அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்

குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி
உடைமை - உடையனாகும் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.
வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்
அவாம் -
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
உடைமை - உடையனாகும் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர்தன்மை; ஒரு நூல் வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.
தூது - s. Message, communication, er rand, notice, tidings, செய்தி. 2. Embassage. embassy, commission, mission, தானாபதித்து வம். (Sa. Dûtya.) 3. (fig.) A negociator in love-intrigues, &c., messenger, ஒற்றன். 4. (fig.) Ambassador, envoy, தானாபதி. 5. A kind of poem representing a lady sending messages to her lover by her female companion, or by a bird, a beetle, &c., ஓர்பிரபந்தம்; [ex Sa. Du. to go.] (c.)

உரைப்பான் - உரைத்தல் ; ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

முழுப்பொருள்
ஒரு தூதர் எனப்படுபவர் அடிப்படையில் மக்களுக்கும் அரசருக்கும் அல்லது இரு நாட்டு அரசருக்கும் நடுவில் இருக்கும் ஒரு தகவல் தொடர்பாலர் என்று அறிவோம். ஆனால் அதனை தாண்டி அவர்களுக்கென்று பண்பென்று சில உண்டு. 

1) முதலாவதாக - அன்புடைமை. தன் நாட்டு மக்களிடமும், மற்ற உயிரினங்களிடமும் நேசம் இருக்க வேண்டும். அவர்களை நேசித்தால் தான் அவர்களின் நலன் கருதி மன்னரிடம் உறவாட முடியும். தூதர் என்பவர் மக்கள் நலனில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.  

2) இரண்டாவதாக - ஆன்ற குடிப்பிறத்தல் - நல்ல / மாட்சிமை பொருந்திய குடிப் பிறப்பு

3) மூன்றாவதாக - வேந்தவாம் பண்புடைமை - ஒரு தூதர் பரந்து விரிவாக பயணம் செய்து மக்களின் எண்ணங்களை அறிந்து அதனை மன்னரிடத்தில் கூறுபவராக இருக்க வேண்டும். ஒரு வேந்தரின் நேரம் விலைமதிக்க முடியாதது. ஆதலால் ஏது முக்கியமாக சொல்ல வேண்டுமோ அதனை தரவரிசைப் படுத்தி மன்னர் முழுவதும் உணர்ந்துக்கொள்ளும் அளவிற்கு சரியான சொற்களை கொண்டு சொல்ல வேண்டும். அதற்கான தக்க நேரத்திலும் சொல்ல வேண்டும். அப்படி இருந்தால் அரசர் விரும்பும் தூதுவராக அவர் இருப்பார்.

ஒப்புமை
தூதன் இலக்கணம்
அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த
சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை
கற்றடங்கல் தூதின் கடன் (பாரத வெண்பா)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை . அவ் விரண்டனையும் மேல் ' வினை செயல் வகை ' என்றமையின் , இஃது அதன்பின் வைக்கப் பட்டது . தான் வகுத்துக் கூறுவான் , கூறியது கூறுவான்எனத் தூது இருவகைப்படும் . அவருள் முன்னோன் அமைச்சனோடு ஒப்பான் ஆகலானும் , பின்னோன் அவனிற் காற்கூறு குணம் குறைந்தோன் ஆகலானும் , இஃது அமைச்சியலாயிற்று .]


அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.) .


மணக்குடவர் உரை
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

மு.வரதராசனார் உரை
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

No comments:

Post a Comment