குடியென்னும் குன்றா விளக்கம்

குறள் 601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் 
மாசூர மாய்ந்து கெடும்
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய், ஓர்விதவலை

மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை;

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
என்னும் - என்கிற
குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.
குன்றா - குறைவில்லாத
விளக்கம் - தெளிவானபொருள்; தெளிவு; ஒளி; சந்திரகலை; மோதிரம்; புகழ்; விசாரணை; நீதிமன்றம்; அதிகம்; விளக்கு.
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
என்னும்
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
ஊர - செலுத்து
ஊர்-தல் - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 
மாய்ந்து - மாய்தல் -  மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்

முழுப்பொருள்
ஒருவனுடைய குடும்பத்தின் அல்லது தனது பெருமை, புகழ், மகிழ்ச்சி ஆகியவை ஒரு மங்காத விளக்கு போன்றது. அது என்றும் நம்மை வாழவைக்கும். அமைதி தரும். வளம் தரும். ஆனால் அவ்விடத்திலோ அல்லது அவனிடத்திலோ சோம்பல் அல்லது கேடு எண்ணம் ஆகிய நோய்கள் மெல்ல மெல்ல படிந்தால் அது அவனுடைய புகழ், பெருமை, மகிழ்ச்சி தனை மெல்ல மெல்ல ஒளி மழுங்குவது போன்று குன்றி கெடும். இது நமக்கு கெடுதலையே தரும் என்கிறார் திருவள்ளுவர்.


ஒப்புமை

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , கருதியன செங்யுங்கால் சோம்புதல் இல்லாமை. ஊக்கம் உடையார்க்கு ஒரோவழிக் குணவயத்தான் மடிவருதல் நோக்கி , இஃது ஊக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது.]
குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம். 
(உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின், 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ் விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லையாதல்.

மணக்குடவர் உரை
குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும். முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Your family could be a bright lamp. However, if one of the members in the family is lazy then the brightness of the lamp will slowly fade away and destroy the family's reputation

Questions that I ask to the kid
When will a family of reputation get destroyed? Why?

No comments:

Post a Comment