சீரினும் சீரல்ல செய்யாரே

குறள் 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
[பொருட்பால், குடியியல், மானம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சீர் செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

சீரினும் - புகழ், செல்வம், பெருமை தரும் செயல்களை காட்டிலும்
சீர்  அல்ல - இகழ்ச்சி தருகின்ற செயல்களை
செய்யாரே - செய்ய மாட்டார்கள்
சீரொடு -  புகழ், செல்வம், பெருமை முதலியனவும்
பேராண்மை - அரியவீரச்செயல்; மிக்கவீரம்; மானம்.
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
வேண்டுபவர் - விரும்புவர்

முழுப்பொருள்
மானத்தை விரும்பி போற்றி வேண்டுபவர் புகழ் செல்வம் பெருமை ஆகியவற்றையும் வேண்டுபவர் தான் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பார். அத்தகையவர் பெருமை தரக்கூடிய செயல்களை செய்கிறாரோ இல்லையோ இகழ்ச்சி தரக்கூடிய செருக்கு விளைவிக்கக்கூடிய செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். புகழ் தரும் செயல்களை செய்யாவிட்டாலும் இகழ்ச்சி தரும் செயல்களை செய்யாது இருப்பதே இருக்கும் கொஞ்சம் புகழையும் பெருமையையும் செல்வத்தையும் குன்றாமல் காக்கும்.

ஆதலால் இகழ்ச்சி தரக்கூடிய செயல்களை செய்தால் மானம் போய்விடும்.

பேராண்மை என்ற சொல் 
குறள் 148
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு” என்ற குறளிலும் மிக பொருத்தமாக வருகிறது. பிறன்மனையை நோக்குகின்றவர்கள் மானம் அற்றவர்கள் என்பதையும் உணரலாம்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ரொடு பேராண்மை வேண்டுபவர்- புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; சீரினும் சீர் அல்ல செய்யார்- புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார். ஏகாரம் தேற்றம்.

எந்நிலைமையிலுந் தளராத மனத்திண்மை யுடைமையால் மானம் பேராண்மை யெனப் பட்டது. சீரினுஞ் சீரல்ல செய்தல் அன்முறையாய்க் கொள்ளையடித்து அறச்சாலை நிறுவுதல் போல்வது.

மணக்குடவர் உரை
தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.

மு.வரதராசனார் உரை
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who wants respect and want to be known as an person of integrity as well as a person who has respect/fame and known for his integrity will be very careful and not do anything dishonest, that brings ill effects, that brings bad reputation. A person of integrity may not do activities that brings fame but at least he will do not dishonest and bad reputation stuffs. 

Questions that I ask to the kid
What does a person of integrity and who wants fame won't do?

No comments:

Post a Comment