நெடும்புனலுள் வெல்லும் முதலை

குறள் 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் 
நீங்கின் அதனைப் பிற.
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய் குறுகியகுப்பிகளில் நீர்மப்பொருளை ஊற்ற உதவுங்கருவி

நெடும்புனல் - ஆழமுள்ளநீர்நிலை

உள் -உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வெல்லும் - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

முதலை - நீர்வாழ்உயிரி; காண்க:செங்கிடை; இறகின்அடிக்குருத்து.

அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல்

அடு - aṭu   IV. v. t. cook, சமை; 2. destroy, அழி. "அட்டாலும் பால் சுவையில் குன்றாது," though milk be boiled its flavour does not diminish.

அடு - aṭu   VI. v. t. approach, கிட்டு; 2. be near, close, adjacent, சேர்ந்திரு; 3. adhere, apply for protection, சார்; 4. v. i. (with dat.) belong to, be suitable to, be becoming, உரியதாகு; 5. happen, சம்பவி. அடுத்தவர்களும் தொடுத்தவர்களும், those near and dear.

புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய் குறுகியகுப்பிகளில் நீர்மப்பொருளை ஊற்ற உதவுங்கருவி

அடும்புனலின் - சேர்ந்துள்ள ஆற்றை 

நீங்கின் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

அதனைப் - அதனை

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
முதலைக்கு பலம் நீரில் என கூறுவர். அதன் பலம் அறிந்து அது நீர் நிலையில், மற்ற உயிர்களை எதிர் கொள்ளும் பொழுது எளிதாக அவற்றை வெல்லும். ஆனால் அந்நீர்நிலையை விட்டு வெளியே வந்தால் முதலையை மற்ற உயிர் இனங்கள் எளிதாக வெல்லும். 

நாம் நம் பலம் அறிந்து, அதற்கு ஏற்ற  களம் அறிந்து, எதிரிகளை எதிர் கொள்ள வேண்டும். களம் அறியாமல், நமது பலத்தை வெளிக்காட்ட முடியாத இடத்தை தேர்ந்தெடுத்தால் அது பகைவருக்கு சாதகமாகவே முடியும் என குறிப்பால் உணர்த்துகிறார் வள்ளுவர்.

இது எதிரியுடன் வெல்லுவதற்கான குறள் மட்டும் அல்ல. வாழ்வில் நமது அன்றாட செயல்களுக்கும் பொருந்தும். ஒருவருக்கு இசையில் ஆர்வம் இருந்தால் அவர் இசை துறையில் சாதகம் செய்து வெற்றி பெறுதல் அவருக்கு இயலும். ஆனால் அவருக்கு விளையாட்டு துறையில் நாட்டமோ அதற்கான பயிற்சியோ வலிமையோ இல்லையென்றால் அவரால் விளையாட்டில் அவ்வளவு எளிதாக பிரகாசிக்க முடியாது. ஒருவர் எல்லாதுறையிலும் பயிற்சியும் உழைப்பும் கொண்டு முயன்றால்  முன்னேறலாம் என்பதெல்லாம் மிகுந்த அபத்தம் வாய்ந்த சொற்றோடர்கள். அப்படி பிரகாசித்தவர்கள் மிக குறைந்த சதவிகிதத்திலேயே இருப்பார்கள். புலியை பார்த்து பூனை சுட்டுப்போட்ட மாதிரி ஆகிவிடும். உதாரணமாக எல்லோரையும் பொறியில் படிப்பில் சேர்ப்பது. அவரவர் அவரவருடைய வலிமைகளை நாட்டங்களை இலக்குகளை ஆழ்ந்து கருத்தில்கொண்டு, தன் செயலை யோகமென செய்தால் அச்செயலை வெல்ல முடியும்.  ஆங்கிலத்தில் "Now Discover your strenghts" என்று ஒரு புத்தகம் உண்டு. நமது வலிமைகளை அறிந்துக்கொள்ளுதல். அது நாம் எக்களத்தில் செயல்புரியவேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்தும்


ஒப்புமை
"வான்சேரின் புள்ளஞ்சா வல்லரில் சுற்றிய
கான்சேரின் மானின் கணம்அஞ்சா - வான்சேர்
சிகர வரைசேரின் தேன்அஞ்சா அஞ்சா
மிகுநீர்க் கயஞ்சேரின் மீன்” (பாரத வெண்பா)

“மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியதுண்டேல்
காட்டுள் நமக்கும் வலியாரையும் காண்டும்” (சீவக.446)

“கூருடை யெயிற்றுக் கோண்மாச் சுறவினம் எறிந்து கொல்லப்
போருடை யரியும் வெய்ய புலிகளும் யாளிப் போத்தும்
நீரிடைத் தோற்ற வன்றே தந்நிலை நீங்கிற் றென்றால்
ஆரிடைத் தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா” (கம்ப.சேது.23)

“உளையச் சிலைக்கும் உழுவையும் தான்தன்
அளையில் தீர்ந் தூரடைந்த தாக - இளிவந்
துயிரிழப்ப தென்றால் உறுமிடநீத் தென்கொல்
செயிருழுக்கும் தீங்கு செயல்” (பாரத வெண்பா)

“கல்லிடை யிட்ட காட்டகம் கடந்து
வெள்ளிடைப் புகுந்த வேட்டுவப் படையினை
ஆட்டுதும் சென்றென” (பெருங்.3.27:22-4)

உபரித்தகவல்
முதலைகளைப் அன்பிலாத ஒரு பிராணியாகிய சங்க இலக்கியமான ஐங்குறுநூறு தனது 41வது பாடலில் சொல்லுகிறது இவ்வாறு: “தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு”. “பார்ப்பு” என்பது ஓர் இனத்தின் குட்டிகளைக் குறிக்கும். இது உண்மையா என்று ஆராயப் புகுந்தால், மெக்ஸிகோ நாட்டு முதலைவகையான “மோர்லெட்” என்பவை அப்படிப்பட்டவை. தம்மினத்தின் குட்டிகளைத் தாமே உண்ணக்கூடியவை.


யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

பரிமேலழகர் உரை
முதலை நெடும்புனலுள்(பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும், புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
(எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.

மு.வரதராசனார் உரை
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை
முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

Thirukkural - Management - Decision Making
Four Kurals highlight the importance of location for the success of any business venture. In real estate language, three things decide the success of real estate business. They are location, location, and location. Kural 495 supports the view that in addition to time, location also influences the outcome of a decision. The importance of  right location is highlighted in Kural 495. A crocodile gains advantage over any other animal when  the crocodile is inside water. The jaguar is an exception. On the contrary, other animals can challenge a crocodile when the crocodile is on land.

The Crocodile mins in deep waters-
Coming out others min against it.


No comments:

Post a Comment