குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து ஒழுகல்; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்.
ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து ஒழுகல்; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்.
ஊருணி - ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை; ஊரையடுத்த குளம்; ஊரார் நீர் முகக்கும் குளம்; ūr-uṇi n. id. + உண்-. Publicdrinking water tank in a village or town; ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந் தற்றே (குறள், 215)
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை; மழை; மேகம்
நிறைதல் - நிறைதல் நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.
அற்றேல் - அப்படியானால்.
நிறைந்தற்றே - (மழையினால்) நிறைந்த/ நிரம்பிய குளம் போலும்
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
அவாம் -
பேர் அறிவாளன் - பல நூல்களை கற்று என்ன பயன் நாம் அறிவுக்கு அறிவானவனின், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன்; pēr-aṟivāḷaṉ n. id. +அறிவு +. Person of mature understanding,wise man; உயர்ந்த ஞானமுடையவன். உலகவாம்பேரறிவாளன்றிரு (குறள், 215).
திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.
முழுப்பொருள்
ஒரு ஊரில் உள்ள குளம் ஊரில் உள்ள மக்களுக்கு உண்ணுவதற்காக பயன்படும் நீர் நிலையாகும். அத்தகைய நீர் தானாக வந்தது இல்லை. அது மேகத்தில் இருந்து பெய்த மழையும் ஊற்றுகளில் இருந்து வந்தது ஆகும். அந்த குளம் அந்த ஊருக்கு பொதுவானது சொந்தமானது.
ஒரு ஊரில் உள்ள குளம் ஊரில் உள்ள மக்களுக்கு உண்ணுவதற்காக பயன்படும் நீர் நிலையாகும். அத்தகைய நீர் தானாக வந்தது இல்லை. அது மேகத்தில் இருந்து பெய்த மழையும் ஊற்றுகளில் இருந்து வந்தது ஆகும். அந்த குளம் அந்த ஊருக்கு பொதுவானது சொந்தமானது.
குளத்தில் உள்ள நீரை போலவே செல்வந்தர்களின் செல்வமும். இவர்களின் செல்வம் தானாக முளைத்தது இல்லை. இவர்களின் உழைப்பு ஒரு பக்கம் (குளம் கட்டுவதற்கான கட்டுமானார்களின் உழைப்புப் போல)இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அது உலகிற்கு சொந்தமானது. கொஞ்சம் ஆழாமாய் பார்த்தால் வானமும் மண்ணும் அளித்த இயற்கை பொருட்களே விலை என்ற பெயரில் பணமாக செல்வமாக அவர்களிடம் போய் சேர்ந்து உள்ளது. ஆக அந்த செல்வம் ஊர் மக்களுக்கு உதவ வேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அதனை உடையவனே பேரறிவாளன். அவனுடைய செல்வம் ஊருணி நீர் போன்று உலகத்திற்கானது. மக்கள் உரிமை கொண்டாடலாம் என்று அர்த்தமில்லை. அச்செல்வத்தை அவன் மட்டும் அனுபவிக்காமல் அந்த மக்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்.
ஊருணி இருப்பது என்பதற்க்காக மழைப்பெய்யவில்லை. ஊருணி இயற்க்கையின் கொடையை சேமித்துத்துவைத்துள்ளது. அதுப்போல் ஒருவர் சூழ்நிலைகளால் நல்ல அறிவு பெற்றுவிடுகிறார். அவர் தானாக இவ்வுலகில் கற்றது என்று என்பது மிக மிக குறைவே. அவர் காலச்சங்கிலியில் ஒரு கொப்பளம் போன்ற மிக மிக சிறிய ஒன்று. அவர் முந்ததைய சந்ததியரின் அறிவு செயல்பாட்டின் ஒரு சிறு துளி மட்டுமே. ஆதலால் அவ்வறிவுச்செல்வம் பொதுவானது. அதனை பிறர்க்கு பயன்படும் வண்ணம் பகிர்ந்தளிப்பதே அறமாகும். அதேப்போல் பொருட்செல்வமும் பலரின் உழைப்பால் குவிந்தவை. அவற்றை பகிர்ந்தளிப்பதே அறமாகும்.
நீர் என்பது அத்தியாவசிய தேவை. ஒரு ஒப்புரவாளன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கொடுக்கிறவனாக இருக்க வேண்டும். அதுப்போல் அறிவும் செல்வமும் அத்தியாவசியம் ஆகும்.
=====
கேணி, பிரத்யேகக் குடும்பக் கேணி அல்ல. ஊருண் கேணி. இந்த வார்த்தையே வெகு அழகு. கிணறுகளில் தண்ணீர் சேந்த மறுக்கப்பட்ட வரலாறு கொண்ட இச்சமூகத்தில் , இந்த வார்த்தை முக்கியமானது.
அந்தக் கேணி நீர் நிறைந்திருப்பது இன்னொரு நல்லூழ்.
பேரறிவாளன் செல்வம் அது போன்றது. என்றால், பேரறிவு என்பது தான் ஈட்டிய பொருள் தனது மட்டுமே என்று கருதாத அறிவு.
எல்லோராலும் பொருள் ஈட்ட இயலாது. ஈட்டுபவர்கள் அதைத் தேவைப்படுவோர்க்குத் தந்துவுவதே சமூக அறம்.
காந்தியின் தர்மகர்த்தா முறை.
=====
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை” (அகநா 42:9-11)
“ஊருணி நிறையளவும் .... மறுக்கின்றார்கள் யார்” (கம்ப..மந்திரப் 82)
“வள்ளிய ராயோர் செல்வம் மன்னுயிர்க் குதவு மன்றோ” (கம்ப.சேதுபந்தன 24)
“ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்” (அப்பர்.மறைக்காடு 5)
“ஊருணி யுற்றவர்க்கு” (திருக்கோவையார்.400)
ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.
பரிமேலழகர் உரை
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.).
மணக்குடவர் உரை
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
மு.வரதராசனார் உரை
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
Thirukkural - Management - Corporate Social Responsibility
Corporate Social Responsibility (CSR) is the development of the twentieth century management practice. There have been debates on the relevance of Corporate Social Responsibility and doing charity with shareholders' money. “Corporate Social Responsibility is sincerely considering the impact of the company's actions on society,”
(Koontz, 1990). Corporate Social Responsibility includes social responsiveness also. “Social Responsiveness is the ability of a corporation to relate its operations and policies to the social environment in ways that are mutually beneficial to the company and to the society,” (Koontz, 1990). Valluvar anticipated the need for organizations to be socially responsible and provided his views on the importance and objectives of Corporate Social Responsibility. Kurals support the need for business organizations to serve the society in which they operate.
Valluvar presented his views on social obligations of an organization in Kural 215. He uses a rich simile to advocate the importance of service to the society.
The wealth of a wise philanthropist
Is a village pool ever full.
The wealth with a person, who considers it as an obligation to help the needy, is like a fountain in a village that keeps giving water for the needs of all the people in that village. The fountain is always overflowing. There is no lack of water. Similarly, wealth keeps increasing in a person who uses his wealth to the welfare and the development of his society.
English Meaning - As I taught a kid - Rajesh
Water accumulated in a pond gathered from rain and other drainage sources is common for the uses of entire people in the village/city/world. Because rain showered for the entire village/world. Not just for the pond.
Similarly, a knowledgeable intelligent person and wealthy person should contribute and benefit the society. Because the knowledge a person has is not just his/her knowledge. He/She didn't start from scratch. They have gained knowledge from the society which has carried it over centuries. Hence, knowledge and wealth of an intelligent person should be useful for many people.
Questions that I ask to the kid
How would you relate a water pond with knowledge?
Is Pond water common for all? What would you relate this to? Why? Why a person who has worked hard to gain knowledge should not think that it is his earned knowledge?
No comments:
Post a Comment