குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
அரங்கு - araṅku * n. raṅga. 1. Stage,dancing hall; நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79). 2. Assembly hall;சபை. (சூடா.) 3. Gambling house; சூதாடுமிடம் அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).4. Place or board chequered with squares;சூதாடுவதற்கு வகுத்த தானம் அரங்கின்றி வட்டாடியற்றே (குறள், 401). 5. Womb; கருப்பம் அரங்கிலவனென்னை யெய்தாமற் காப்பான் (திவா. இயற். நான் 30).
இன்றி - iṉṟi adv. இன்-மை. Without;இல்லாமல்.
வட்டு - சூதாடுங்கருவி; திரட்சி; திரண்டபொருள்; நீர்வீசுகருவிகளுள்ஒன்று; ஒருவிளையாட்டுக்கருவிவகை; அப்பளஞ்செய்யுமாறுஉருட்டிவைக்கும்மாவுருண்டை; முள்ளிச்செடி; சிறுதுணி; கண்டசருக்கரை; குடையில்கம்பிகள்கூடுமிடம்.
ஆடியற்றே - ஆடுவதுபோலாம்
நிரம்பிய - பெருகிய, நுண்ணிய அறிவினைத் தரும்
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை
இன்றிக் - iṉṟi adv. இன்-மை. Without;இல்லாமல்.
கோட்டி - துன்பம்; பைத்தியம்; பசுடி; நிந்தை; சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு; ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்; அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்; அவர்க்ளின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும்.
முழுப்பொருள்
ஒரு விளையாட்டை விளையாட வேண்டும் என்றால், அவ்விளையாட்டிற்கு தேவையான அறிவை பெற்றிடுதல் வேண்டும். அதற்கு தேவையான அரங்கினை அமைக்க வேண்டும். ஒரு சூது விளையாட்டானாலும் அதற்கு தேவையான கட்டங்களை வரைய வேண்டும். அப்படி ஒரு விளையாட்டிற்கு தேவையான வற்றை கட்டமைக்காமல் அவ்விளையாட்டை விளையாட முடியாது.
அதுப்போல சான்றோர்கள் அறிவுடையோர் நிறைந்த சபையில் ஒருவர் பேசவேண்டும் என்றால் நூல்கள் பல கற்று ஆயுத்தமாக இருக்க வேண்டும். அப்படி கற்காமல் பேசுவது என்பது கட்டங்களை வரையாமல் விளையாடுவது போல் ஆகும். இது நகைக்க தக்கது. கல்லாமை எவ்வளவு மடமையானது என்பதை உணர்த்துகிறது.
உதாரணம்
இந்த எடுத்துக்காட்டுக்கு, வள்ளுவர் காலத்திய பகடை ஆட்டம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. பாண்டவர்களின் மூத்தவரான தருமர் கௌரவர் அமைத்த சூதாட்டகளத்தின் தன்மையை முற்றிலுல் ஆராயாது சூதாட புகுந்ததினால், எல்லாவற்றையும் இழந்து, எதைவைத்து இழக்கக்கூடாதோ, அதாவது தங்களின் மனைவியான பாஞ்சாலியயும் இழந்து அவமானப்பட்டு, வனவாசம் புகநேர்ந்ததைச் சுட்டிக்காட்டி கல்லாமையினால் வரும் இழப்புகளையும், அவமானங்களையும் சுட்டிக்காட்டுகிறார் முதற்குறளிலேயே வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”வல்லான் ஆடிய மணிவட்டு” (சீவக.983)
“இன்னா, கல்லாதான் கோட்டி கொளல்” (இன்னா.29)
பரிமேலழகர் உரை
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.).
மணக்குடவர் உரை
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.
மு.வரதராசனார் உரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
English Meaning - As I taught a kid - Rajesh
If person plays a game without knowing its rules and regulations, without practice without constructing the basic playfield for the game, then the person's ignorance of the game will be come obvious to whoever watching the game. Similarly, if a person goes to a stage or conference or meeting or gathering without preparation without knowledge, then it would become obvious and people would laugh at him. Hence, not learning is looked upon very low.
Questions that I ask to the kid
What happens if we don't know the rules of game? What happens when a person goes to stage or to a discussion or interview without preparation or knowledge?
No comments:
Post a Comment