Skip to main content

Posts

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

குறள் 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் செவியின் - செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. சுவை - ஐம்புலன்களுள்நாவின்உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின்இரசம்; சித்திரைநாள். உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).   உணரா - உணராமல், அறியாமல், ஆராயாமல், கருதாமல் வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; ...

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

குறள் 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் நுணங்கிய - நுணங்குதல் - அசைதல்; மெல்லிதாதல்; நுட்பமாதல்; வளைதல்; துவளுதல்; செறிதல்; வாடுதல். கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ். கேள்வியர் - கேள்வி அறிவை உடையவர்  அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) வணங்கிய - வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல். வாயினர் - பேச்சினை உடையவர்கள் ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் அரிது - அருமை; பசுமை; aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.   முழுப்பொருள் “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவர்க்கு அணியல்ல மற்றுப...

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

குறள் 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் கேட்பினும் -  கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேளாத் - கேளாமல் - கேட்காமல் தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. தகையவே - தன்மை  உடையனவே கேள்வியால் - கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ். தோட்கப்படாத -  துளைக்கப்படாத செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. முழுப்பொருள் செவிகள் படைக்கபட்டதே அறிவுச்செல்வத்தை கேள்வியறிவாக பெறத்தான் அதை செய்யவில்லை எ...

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

குறள் 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்  [பொருட்பால், அரசியல், கல்லாமை]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் விலங்கொடு  - விலங்கு -  குறுக்கானது; மாவும்புள்ளும்; மான்; கைகால்களில்மாட்டப்படுந்தளை; வேறுபாடு; தடை; உயிர்மெய்யெழுத்துகளில்இ, ஈ, உ, ஊமுதலியஉயிர்களைக்குறிக்கும்அடையாளமாகமேலும்கீழும்உள்ளவளைவு; குன்று; உடல். மக்கள் -  மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். அனையர் -  They are like. அன்னர்--அன்னார். Such persons இலங்கு -  குளம், ilangku   III. v. i. shine, glitter, be bright, ஒளிசெய். நூல் -  பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. கற்றார் - கற்றவர்கள்; அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள். உடன் -  ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு. கற்றாரொடு - கற்றார் உடன்  ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன...

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

குறள் 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் மேற்குடி - mēṟ-kuṭi   n. id. +. Land-owners of a village; காணியாளர். கீழ்க்குடியாகியவரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப். 13, 24, உரை). மேற்பிறந்தா  ராயினும் - உயர்குடியில் பிறந்தவராயினும்; செல்வந்தராயி பிறந்தவராயினும்  கல்லாதார்   -  நெறிநூல்கள் கல்லாதவர் கீழ்ப்பிறந்தும் - கீழான குடியில் பிறந்தும் கற்றார் -  அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள். அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம் அனைத்திலர் -  அளத்தற்குரிய அளவுக்கு இல்லாதார் பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு. முழுப்பொருள் ஒருவர் உயர்குடியில் பிறந்திருந்தும் கற்காமல் கல்லாதவராய் இருந்தால் அவர் கீழான குடியில் பிறந்...

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

குறள் 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர் கண் -   விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். பட்ட - இருக்கும்  வறுமையின் -  துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை. இன்னாதே - இன்னாது - தீது; துன்பு கல்லார் -  கல்வியறிவற்றவர், கீழ்மக்கள். கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். பட்ட   - இருக்கும்  திரு -  திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம். முழுப்பொருள் கொடிது கொடிது வறுமை கொடிது என்றார் ஔவையார். நல்லோர்க்கும் அல்லோர்க்கும் வறுமை கொடியதே. கெட்டவன்/வரியவன் வாழலாம் ...

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

குறள் 398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து [பொருட்பால், அரசியல், கல்வி] பொருள் ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஒருமைக்கண் - ஒரு பிறப்பில் தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். கற்ற - கற்கை - படித்தல் கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி. ஒருவற்கு -  ஒரு மனிதனுக்கு எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு. ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து. உடைத்து - உடைதல் - இருக்கும் முழுப்பொருள் ஒருவர் தன்னுடைய பிறப்பில் கற்றவை அந்தப் பிறவியில் மட்டும் பயன் தராமல் மேலும் பிறக்கப்போகும் ஏழுபிறவிக்கும் பயன் தரும் தன்ம...