Skip to main content

Posts

028 கூடாவொழுக்கம்

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - கூடாவொழுக்கம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்  ஐந்தும் அகத்தே நகும் குறள் 272 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்  தான்அறி குற்றப் படின் குறள் 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று குறள் 274 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று குறள் 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும் குறள் 276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் குறள் 277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து குறள் 278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் குறள் 279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன  வினைபடு பாலால் கொளல் குறள் 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் பதிவு வரிசை

வலியில் நிலைமையான் வல்லுருவம்

குறள் 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்  புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. இல் - il   n. இன்மை 1. Non-existence;இன்மை. (நாலடி. 52.) 2. Death; சாவு (சூடா.)part. (Gram.) A negative sign; ஒர் எதிர்மறையிடைநிலை செய்திலேன். நிலைமை - இயல்பு; வாழ்க்கைநிலை; நிலை; நிலவரம்திண்மை; உறுதி; உண்மை; புகழ்; வீடுபேறு; நிலவுடைமை யான் - தன்மையொருமைப்பெயர்; variyāṉ   s. the 18th of the astrological yogas; 2. an ascetic, வரிடன். வல் - வலிமை; திறமை; மே...

027 தவம்

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - தவம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை  அற்றே தவத்திற் குரு குறள் 262 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது குறள் 263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் குறள் 264 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் குறள் 265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் குறள் 266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு குறள் 267 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்  சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. குறள் 268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும் குறள் 269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல் குறள் 270 இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் பதிவு வரிசை

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

குறள் 263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] பொருள் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார் பெருமை துணைக்கூறின் (குறள், 22).   துறந்தார்க்குத் - துறந்தவர்களுக்கு துப்புரவு - tuppuravu   n. துப்பு¹ + உரவு 1.Ability, cleverness; சாமர்த்தியம் சர்வேசுவரனைக்கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு,1, 5, 3). 2. Necessity; வேண்டற்பாடு 3. Excellence; மேன்மை (W.) 4. Beauty; அழகு (W.)5. Established custom, order, propriety ofconduct; முறைமை ; தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு. வேண்டுதல் - vēṇṭu-   5 v. cf. வேள்-. [K.bēḍu.] tr. 1. To want, desire; விரும்புதல்.பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித்.145). 2. To beg, entreat, request; பிரார்த்தித்தல். வேண்டித்த...

026 புலான்மறுத்தல்

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - புலான்மறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் குறள் 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு குறள் 253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் குறள் 254 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் குறள் 255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு குறள் 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் குறள் 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின் குறள் 258 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் பதிவு வரிசை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

குறள் 253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்  உடல்சுவை உண்டார் மனம்  [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் படை - paṭai   n. படு²-. [K. paḍe.] 1.Army; சேனை (பிங்.) படையியங் கரவம் (தொல்.பொ. 58). 2. Forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai,kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai,tuṇai-p-paṭai, pakai-p-paṭai;பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை ) 3. Mob, rabble, crowd; திரள் Colloq.4. Relations and attendants; பரிவாரம் அவன்படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 5. Weapons,arms of any kind; ஆயுதம் தொழுதகை யுள்ளும்படையொடுங்கும் (குறள், 828). 6. Instrument,implement, tool; கருவி 7. Means, agency;சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்,555). 8. (Jaina.) Traid of excellent things.See இரத்தினத்திரயம் படை மூன்றும் (சீவக. 2813).9. A sledge-like weapon, used in war; முசுண்டி (பிங்.) 10. Ploughshare; கலப்பை (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு 7...

025 அருளுடைமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - அருளுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணும் உள குறள் 242 நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால்  தேரினும் அஃதே துணை குறள் 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் குறள் 244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை குறள் 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி குறள் 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார் குறள் 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு குறள் 248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது குறள் 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் குறள் 250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்  மெலியார்மேல் செல்லு மிடத்து பதிவு வரிசை