குறள் 428 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அஞ்சுதல் - பயப்படுதல் அஞ்சுவது - பயம் கொள்வது அஞ்சாமை - பயப்படாமை, திண்மை (மன உறுதி, வலிமை, கலங்காநிலைமை, பருமன்; உண்மை, நிதானம், பாரம், மெய்), ஒன்றை அஞ்சாமல் எதிர் கொள்ளுதல், ஒன்றை பயம் இல்லாமல் சந்தித்தல்; பயமின்மை, அச்சமின்மை தைரியம், துணிச்சல், துணிவு பேதைமை - மடமை ,அறிவற்றது; உய்த்துணராமை. அஞ்சுவது - பயம் கொள்வது அஞ்சல் - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால் அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறிவார் - அறிவுள்ளவர்கள் தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு. முழுப்பொருள் : நாம் அஞ்ச வேண்டிய (செயல்கள், காலம், மனிதர்கள்) விசயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது மடத்தனம் ஆகும். அறிவற்றவர்களே அவ்வாறு செய்வார்கள். அதே சமயம் எதைக் கண்டு அஞ்ச வேண்டும் அதைக் கண்டு அஞ்சி அதற்குத்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.