இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

 

குறள் 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

இகலான் - வெறுபினால் வரும் பகை

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல் 

எல்லாம் - முழுதும், அனைத்தும்

நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

நகல் - சிரிக்கை; மகிழச்சி; நட்பு; ஏளனம்; படி.

நகலான் - மகிழ்வும் இன்பமுமாம் (நகல் – மகிழ்வு) – (இவற்றைத் தருகின்ற நல்ல நட்பு)

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

நல் - நல்ல; வறுமை

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
 
செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
பகையுணர்வால் துன்பம் மட்டுமே கிட்டும். அழிவே உண்டாகும். நிம்மதியும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. அதுவே பகையை வளர்க்காமல் சிரித்து மகிழ்ந்து நல்லிணக்கத்துடன் நட்பாக வாழ்ந்தால் நற்மதிப்பும் மேமையும் பெருமையாக கிட்டும். பகையை வளர்க்காமல் நட்பை வளர்ப்பதே ஆண்மை எனவும் கூறலாம்.  

அவ்வாண்மையைப் பெற்ற காந்தி அவர்களை இவ்வுலகில் உள்ள எல்லோரும் போற்றுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஒன்றே. காந்தி அவர்கள் பகையை வளர்க்காமல் நட்புகளை வளர்த்தார். எதிர் தரப்பையும் மதித்து அவர்களிடம் உரையாடினார். அமைதியின் வழி உரையாடல்களை வளர்தெடுத்து நட்புகளை வளர்த்து விடுதலையை பெற்றுத்தந்தார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

No comments:

Post a Comment