இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

 

குறள் 858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகலிற்கு - இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.
எதிர் - (வி)எதிர்என்னும்ஏவல்.

சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல்.

ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; ஆக்கக்கிளவி : ஆக்கம்உணர்த்தும்சொல்; செயற்கையைஉணர்த்தும்ஆயினான்; ஆயினாள்முதலியனவாய்வழங்கும்சொல்.

அதனை - அந்த செயலை (அந்த தவறை)

மிகல் -   மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை.

ஊக்கின் - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

ஊக்குமாம் - - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
பகையுணர்வு ஒருவரை கொள்ளும். பகையுணர்வு ஒருவரின் உள்ளத்தில் மகிழ்ச்சியை முகத்தில் புன்னகையை அழிக்கும். பகை தீது. அத்தகைய பகையுணர்வை அழிப்பதே ஒருவரின் எண்ணமாக இருத்தல் வேண்டும். 

ஆதலால் பகையுணர்வை அறுத்து (கிள்ளி எறிவது) நடுநிலையாக இருத்தலே ஆக்கத்தை தரும். பகையுணர்வை வளர்க்காது அதன் பக்கம் சாயாது இருத்தலே ஒருவருக்கு ஆக்கத்தை/செல்வத்தை தரும். பகையை அளவுக்கு மீறி வளர்த்தால் அல்லது பகையை வரவேற்றால் அதனால் வருவது கேடாகும் (அழிவு, தீது, துன்பம்).

இதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். பகையுணர்வு வளரமால் இருக்க ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனத்தை செலுத்தலாம். பயனுள்ள செயலில் கவனத்தை செலுத்தினால் பயனற்ற அழிவற்ற பகையுணர்வுக்கு நேரம் இருக்காது. ஆதனால் அழிவும் இருக்காது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.).

மணக்குடவர் உரை
மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

சாலமன் பாப்பையா உரை
மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

No comments:

Post a Comment