வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

 

குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

வென்று - வெல்லுதல்
வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

ஈக - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

மாலை  - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

அயர் - ayar   s. langour, அயர்வு; 2. distress. அயர்வுயிர்த்தல், recovering from langour.  , ayar   VI. v. t. forget, மற., வாட்டம்; 
அயர் -அயர்-தல் - ayar-   4 v. intr. To play, sport;விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும்(கலித். 82).

கம் - வானம்; காற்று; மேகம்; வெண்மை; உயிர்; தலை; நீர்; ஆடு; தொழில்; கம்மியர்தொழில்; வீட்டின்பம்; மண்டையோடு; பிரமன்.

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

முழுப்பொருள்
தலைவி கூறுவதாக
என்னைப் பிரிந்து போருக்கு சென்ற என் வேந்தன் போரிலே வென்று வரட்டும். ஏனெனில் அதுவே அவருக்கு இன்பம்/வெற்றி. சரி, வந்து என்ன? தலைவன் வீட்டிற்கு வந்து நானும் தலைவனும் மாலையில் கூடி தழுவி முயங்கிப் புணர்ந்து விளையாடும் வீட்டின்பத்தை எனக்கு விருந்தாக படைக்கட்டும் என்று தலைவி கூறுகிறாள்.

நற்றிணைப் பாடலொன்றும் இக்கருத்தை ஒட்டியிருப்பதைப் பார்க்கலாம்.

“பூண்கதில் பாகநின் தேரே....
அரிவை
விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்னகை காண்கம்” (நற்றினை 81:5-9)

“நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப
மாலை மான்ற மணல்மலி வியனகர்த்
தந்தன நெடுந்தகைத் தேரே என்றும்
அரும்படர் அகல நீக்கி,
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே” – (நற்றிணை: 361:5-9)

குறுந்தொகைப் (155: 6-7)பாடல் கூறுவதையும் காணலாம்.

“மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரும் என்னும் உரைவா ராதே”

”விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை...
செல்லு நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புக லாய்ந்தே” (அகநா.324:1-15)

“மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தோ பெற்றனள் திருந்திழை யோளே” (அகநா 384:13-4)

இன்றைய இரண்டாவது குறளுக்கான காரணம், போர் செய்தமன்னன், முயங்கற் போர்க்கு தம் தலைவனை அனுப்பவேண்டும் என்பதற்காக.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக. (மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.).

மணக்குடவர் உரை
நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக. வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.

மு.வரதராசனார் உரை
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

சாலமன் பாப்பையா உரை
அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

No comments:

Post a Comment