கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

 

குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண்டது -  காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி

மன்னும் - மன்னில்
மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி

மன்னும் - மன்னில்
மன்னும் - மன் மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

திங்களைப் - திங்கள் - சந்திரன்; மாதம்; திங்கட்கிழமை; பன்னிரண்டு.

பாம்பு - ஊரும்உயிர்வகை; இராகுஅல்லதுகேது; நாணலையும்வைக்கோலையும்பரப்பிமண்ணைக்கொட்டிச்சுருட்டப்பட்டதிரணை; ஆயிலியநாள்; நீர்க்கரை; தாளக்கருவிவகை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

கொண்டற்று - முழுவது பரவியது போலாகியது.

முழுப்பொருள்
நான் எனது காதலரை / காதலியை கண்டது என்னவோ ஒரு நாளைக்குத் தான். ஆனால் கிரகண காலத்து ராகுப் பாம்பு சந்திரனை விழுங்குவதை உலகே அறியும் படி இருள் கவ்வுமே அச்செய்தியைப்போல நாங்கள் ஒருநாள் சந்தித்த செய்தி இவ்வூர் மக்களிடம் அலராக/ பழிச்சொல்லாக / புறங்கூற்றாக பரவியிருக்கிறது. கிரணம் இருளைக் குறிப்பதால், இந்த அலர் காதலை வளர்க்கும் மகிழ்ச்சியானது அன்று. இந்த அலர் காதலர்களுக்கு துன்பமே தருகிறது என்று உணரலாம். 
 
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உற்றது மன்னும் ஒருநாள்” (குறுந் 271:3)

பரிமேலழகர் உரை
(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.

மு.வரதராசனார் உரை
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!. 

No comments:

Post a Comment