கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

 

குறள் 736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
[பொருட்பால், அரணியல், நாடு] 

பொருள் 
கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியா - அறியாமல், உணராமல்

கெட்ட  - அழிந்த; தீய.

இடத்தும் -தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

குன்றா - குறைவில்லாத, குறையாத

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நாட்டின் - நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.


தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள் 
பகைவர்களின் அச்சுறுத்தல்களான கேடுகளை அறியாத நாடு; வறட்சி,  பெரு வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளை சந்திக்காத நாடு, கேடுகளை சந்தித்தாலும் (இயற்கை அழிவுகளான வறட்சி, பெருவெள்ளம், புயல், சுனாமி) தன்னுடைய செல்வம் குன்றாமல் தன்னுடைய இயற்கை வளங்களின் செழுமை குன்றாமல் பார்த்துக்கொள்ளுமானால் அந்நாடே சிறந்த நாடு. தனது செல்வத்தையும் தன் இயற்கை வளங்களின் செழுமையையும் பேணும் நாடே சிறந்த நாடு. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார். இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.

மணக்குடவர் உரை
கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.).

மு.வரதராசனார் உரை
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

No comments:

Post a Comment