வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

 

குறள் 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள் 
வேட்பன -  வேட்பு - விருப்பம்
வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம்

சொல்லி-  சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

இல - இல்லை
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

கேட்பினும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

சொல்லா - சொல்லாமல் 

விடல்விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள் 
பயன் உள்ளவற்றையும் அரசர் கேட்கவில்லையென்றாலும் அரசரிடம் சொல்வது அமைச்சரின் கடமை. அதேப்போல எப்பொழுதானாலும் பயனல்லாதவற்றை அரசர் வலிந்து கேட்டாலும் அதனை கூறாமல் தவிர்ப்பது அமைச்சரின் கடமையாகும்.

பயன் உள்ளவற்றை கேட்கவில்லையென்றாலும் ஏன் கூறவேண்டும்?
அரசர் பல அலுவல்களில் இருப்பவர். அதனால் எல்லா செயல்களுக்கும் முதன்மை அளிக்க முடியாமல் அவை பின்னுக்கு செல்லக்கூடும். ஆதலால் அமைச்சர் தான் அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து அரசரிடம் கூறவேண்டும். அரசரும் மனிதர் தானே. அவர் சோர்வுடையக்கூடும். அப்பொழுது செயலின்கண் நாட்டமில்லாமல் இருக்கலாம்.  ஆதலால் பயனுள்ள செயல்களை எடுத்துரைப்பது அவசியமாகும்.

பயன் அல்லாதவற்றை கேட்டாலும் ஏன் கூறக்கூடாது?
நேரத்தை விரயம் ஆக்கக்கூடாது. அரசர் என்பவர் பல செயல்களை செய்பவர். அவருடைய நேரம் விலைமதிப்பில்லாதது. பொதுவாகவும் நேரமும் விலைமதிப்பில்லாதது. ஆக்கமற்ற செயல்களில் நேரத்தையும் ஆற்றலும் ஊக்கத்தையும் செலவழிக்கக்கூடாது. ஆதலால் அரசரிடம் அவர் கேட்டாலும் அவற்றை கூறக்கூடாது.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக. சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.

மு.வரதராசனார் உரை
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

No comments:

Post a Comment