விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

 

குறள் 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்கணவன்
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
விடு - பகலிரவுகள்நாழிகையளவில்ஒத்தநாள்.

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை

மாற்றம் - சொல்; விடை; வஞ்சினமொழி; மாறுபட்டநிலை; பகை; கழுவாய்; வாதம்.

வேந்தர்க்கு - வேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்ஆகியமூன்றுதமிழரசர்.

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

வடு - தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்.

மாற்றம் - சொல்; விடை; வஞ்சினமொழி; மாறுபட்டநிலை; பகை; கழுவாய்; வாதம்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு

சோர் - சோர்வு; வஞ்சகம்; பகட்டு.
சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்

வாய்சோரா – மறந்தும் தன் வாயில் கொள்ளாத

வன்கண்மை - கொடுமை; வீரம்

வன்கணவன் - உறுதியுள்ள சொற்களைப் பேசவல்லோன்

முழுப்பொருள் 
தன்னுடைய மன்னர் சொல்லி அனுப்பிய செய்தியை (சொற்களை) பிறர் மன்னரிடம் தூதாக சென்று சொல்பவன் குற்றம் பொருந்திய பிழையான சொற்களை தீய சொற்களை சோர்விலும் கூட மறந்தும் வாய்தவறி கூறாத மன உறுதியையும், உறுதியுள்ள சொற்களையும் உடையவனாவன். 

தூதுச் செய்தியைக் கொண்டு செல்வோன் வாய் தவறியும் தன் பொறுப்புக்கும், அதன் சிறப்புக்கும் பொருந்தாத, தாழ்வான குற்றமுள்ள சொற்களைப் பேசாத உறுதியும் திண்மையும் உள்ளவனாய் இருக்கவேண்டும்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”தடுமாற்றம் இன்றித் தகைசான்ற சொல்லான்
வடுமாற்றம் வாய்சோரா னாகி - விடுமாற்றம்
எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால்
அஞ்சா தமைவது தூது” (பாரத வெண்பா)

பரிமேலழகர் உரை
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.

மு.வரதராசனார் உரை
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

சாலமன் பாப்பையா உரை
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment