உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்


குறள் 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

சிறியார் - சிறியவர், சிறியர், சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நடுங்கல் - அச்சம்

அஞ்சி - அஞ்சுதல் -  பயப்படுதல்

குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்; வேண்டுகோள்; வேண்டுவது:துண்டம்; ஆற்றிடைக்குறை; சொல்லின்எழுத்துக்குறை; ஆறாம்வேற்றுமை; உண்ணுந்தசை; அரசிறை

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

கொள்வர் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

பெரியார்ப் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பணிந்து - பணி-தல் - paṇi-   4 v. cf. pan. [M. paṇi-yuka.] intr. 1. To be low in height, as ahouse, a roof or a branch; to be short, as aperson or post; to be lowered; தாழ்தல் பணியியரத்தைநின் குடையே (புறநா. 6). 2. To behumble; to be submissive, as in speech; பெருமிதமின்றி யடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல்(குறள், 125). 3. To decline, as a heavenly body;to descend lower, as a bird; இறங்குதல் (W.) 4.To spread; பரத்தல் (சீவக. 2531, உரை ) 5. Tobecome inferior; தாழ்ச்சியாதல். 6. To fall, asprices, wages; குறைதல் (J.) 7. To be reducedin circumstances; எளிமையாதல். (J.)--tr. 1. Tobow to, make obeisance to; வணங்குதல் உடையான் கழல்பணிந்திலை (திருவாச. 5, 35). 2. To eat;உண்ணுதல். பூதம் பணிகிறதுபோலப் பணிகிறான்.(J.)  

முழுப்பொருள்
அளவிலும் அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு சிறிய நாடு தன்னைவிட பெரிய நாடுகளை கண்டு உள்ளே நடுங்கி அச்சம் கொண்டு ஒரு மனக்குறையுடன் வாழ்தலை காட்டிலும் அப்பெரிய நாடுடன் தாழ்ந்து பணிந்து இணக்கமாக நட்பாக சென்றுவிடுவதே சிறந்தது. நட்பாக இயைந்துவிட்டால் அச்சம் என்று ஏதுமில்லை.  பெரிய நாடுகளுடன் போட்டிப்போட்டு வெற்றிப்பெற முடியாது. அச்சம் இல்லாமல் மற்ற காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்தி ஆக்கம் செய்யலாம். அதுவே நன்மை பயக்கும்.

அப்படி என்றால் பெரிய நாட்டிற்கு அடிபணிவதா / அடிமையாவதா? இல்லை. நட்பென்று ஆகிவிட்டால் அங்கே அடிமைத்தனம் வராதே. இருநாடுகளும் பேசி பல பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

இது காரியம் பெரியதா அல்லது வீரியம் பெரிதா என்ற சொலவடையை ஒட்டியகுறளாகத்தான் கொள்ளவேண்டும்.மானத்தைப் போற்றும் அரசர்களுக்கு இது சற்றும் பொருந்தாவிட்டாலும், உலகியல் வழக்கில் நடக்கக்கூடியதே என்கிறார். 

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர். இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

No comments:

Post a Comment