துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்


குறள் 557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
துளி - திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

ஞாலத்திற்கு - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல்.

எற்று - எற்றுதல் - eṟṟu-   5 v. [M. e&tacute;&tacute;u.] tr. 1. Tostrike, cuff, hit with the fist; அடித்தல் எற்றியவயிற்றள் (கம்பரா. மாரீசுன். 63). 2. To kick;உதைத்தல். 3. To butt, as an elephant; to dashagainst, as the waves of the sea; மோதுதல் எற்று தெண்டிரை (தேவா. 92, 2). 4. To throwout, as water from a vessel; எறிதல் நீரெற்றும் மரம் 5. To cut, cleave, rend; வெட்டுதல் எற்றாமழுவும் (கலித். 85). 6. To pierce, stab; குத்துதல் (திவா.) 7. To kill; கொல்லுதல் (திவா.) 8.To cast away, get rid of; நீக்குதல் எற்றுவமே பாசமெலாம் யாம் (சைவச. பாயி. 7). 9. To snap, as acarpenter's line for marking a board; நூல் தெறித்தல் எற்றுநூல்போன்று (நைடத. சந்திரோ. 33). 10.To raise; எழுப்புதல் (திவா.)--intr. 1. To cease;நீங்குதல். இடைக்கொட்கி னெற்றா விழுமந்தரும் (குறள்,663). 2. To feel compassion; இரங்குதல் எற்றியகாதலினாலிசைத்தாள் (தஞ்சைவா. 224).  ;;eṟṟu-   5 v. tr. To lift, take;எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி.23).

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்
அற்றுப்போதல் - முழுதும்ஒழிதல்
அற்றேம் -  ஒன்றும் இல்லாத ஒரு நிலை

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

அளி  - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.
அளி  - (வி)கொடு; காப்பாற்று

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

வாழும் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
மேகத்தில் இருந்து மழைத்துளிப் பொழியாமல் போனால் இவ்வுலகம் வறண்டுப்போகும். அது உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் கடும் இன்னல்களை ஏற்படுத்தும். அதனை யாரும் விரும்பமாட்டார்கள். அத்தகைய நிலை விரைவிலேயே முடிந்து மலர்ச்சியான காலகட்டம் வரவேண்டும் என்று மக்கள் வேண்டுவர்.

அதுப்போல அன்பும் அருளும் எளிமையும் ஈகையும் மக்களை பகைவரிடமிருந்தும் உள்நாட்டு குற்றவாளிகளிடமிருந்தும் காப்பாற்றும் நேர்மையான மன்னவன் இல்லையேல் அந்நாட்டு மக்களும் மற்ற உயிரினங்களும் துயரத்தில் அவதிப்படுவர். அத்தகைய மன்னரை அத்தகைய ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். விரைவிலேயே அந்த ஆட்சி மடிந்து நல்லாட்சி அமைய எல்லோரும் வேண்டுவர்.

“எற்று”, “அற்று” என்னும் சொற்கள் துன்பத்தை உணர்த்தும் வியப்புச் சொற்கள், “அந்தோ” “ஐயகோ” என்னும் சொற்களைபோல்! 

இக்குறள் செங்கோன்மை அதிகாரத்தில் கண்ட, “வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” என்ற குறளை மறுவாக்கம் செய்துள்ளது. “நீரின்றி அமையாது உலகு” என்பது வான் சிறப்பு அதிகாரத்தில் ஏற்கனவே வள்ளுவர் சொல்லியதுதான். இதை வேறுவிதமாக நான்மணிக்கடிகை இவ்வாறு கூறுகிறது.

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் 
தவம்இல்லார் இல்வழி இல்லை; தவமும் 
அரசன் இலாவழி இல்லை; அரசனும் 
இல்வாழ்வார் இல்வழி இல் (49)

முறையாக ஆட்சி செய்பவனே சிறந்த அரசன். அரசன் நல்ல ஆட்சி செய்யவில்லையென்றால் நாட்டில் மழை பெய்யாது. மழையில்லா விட்டால் மக்களுக்கு நன்மையில்லை. மக்கள் இல்லையென்றால் அரசனும் இல்லை என்பதை மேற்கண்டபாடல் சொல்லி, மழையின்மையைக் கொடுங்கோன்மையின் விளைவாக உணர்த்துகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வானம் துளிமாறு பொழுதினில் உலகம்” (கலி.25:28)
“பெயின்நந்தி வறப்பிற்சாம் புலத்திற்குப் பெயல்போல்” (கலி.78:19)

“வறன் உழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிதே” (இனியவை.16)

பரிமேலழகர் உரை
'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
(சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது. மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

சாலமன் பாப்பையா உரை
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

No comments:

Post a Comment