குறள் 509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]
பொருள்
தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு.
தேறற்க - தெளிவு பெற வேண்டாம்
யாரையும் - எவராயினும், யாராக இருந்தாலும், யாவர்
தேர்-தல் - tēr- 4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி
தேராது - தேராமல்; ஆராயாமல்; அறியாமல்; தேடாமல் ; சிந்திக்காமல்;
தேர்ந்த - தேர்ந்து எடுத்த; முடிவு செய்த
பின்- பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு
தேறுக - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்.
தேறும் - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்.
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
முழுப்பொருள்
ஆராயாமல் ஒருவரையும் நம்பாதே. ஒருவர் ஒரு செயலை செய்து முடிப்பார்கள் அல்லது அவர்கள் ஆலோசனை சரியாக இருக்கும் என்று அவரைப் பற்றி ஆராயாமல் தெளிவுப்பெறாமல் நம்பாதே. அவர்களை நன்கு ஆராய்ந்து அவர்கள் திறனை எண்ணங்களை மன உறுதியை சோதனை செய். அவர்கள் தேர்ச்சி அடைகிறார்களா என்று பார். அப்படிச் செய்து தெளிவு பெற்ற உடன் அவர்களை நம்பு. அல்லது அவர்கள் ஒரு சில நல்ல செயல்களை செவ்வென செய்து முடித்த பின்பு அவர்களை நம்பு.
அப்படி ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிவு /நம்பிக்கை பெற்ற பின்பு துணிந்து எந்த ஒரு செயலையும் செய்து அதன் பயனை (பொருளாக) பெறலாம்.
"எண்ணித் துணிக கருமம்" என்ற மற்றொரு குறளின் வாக்கியம்/அடிப்படை ஒரு செயலுக்கு ஒரு நபரை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்பற்கு இங்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.
('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' :ஆகுபெயர்.).
மணக்குடவர் உரை
யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.
மு.வரதராசனார் உரை
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்
தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
No comments:
Post a Comment