தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
தண்ணந் - தண்ணம் - ஒருகட்பறை; மழுவாயுதம்; குளிர்ச்சி; காடு.
தண் - குளிர்ச்சி; அருள்.
தண்ணீர் - taṇṇīr   [நீர்] taNNi தண்ணி water; [cold water]  

துறைவன் - துறைவன் - நெய்தல்நிலத்தலைவன்

தண-த்தல் - taṇa-   12 v. intr. 1. To depart,go away; நீங்குதல் தங்குதீமல நாளுந் தணந்திடும்(பிரமோத். 10, 38). 2. To go; to pass; போதல் --tr. 1. To put away, remove; நீக்குதல் மெலிவைத்தணப்பான் (தணிகைப்பு. கள 340). 2. To leave,separate from; பிரிதல் தணந்தமை சால வறிவிப்பபோலும் (குறள், 1233).

தமை - tamai   n. T. tami. Passion,desire; ஆசை அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது. 

தணந்தமை - அவர் நீங்கியதை

நம்மினும் - நம்மை விட

முன்னம் - முற்காலம்; கருத்து; மனம்; குறிப்பு; இம்மொழிசொல்லுதற்குஉரியாரும்கேட்டற்குஉரியாரும்இன்னோரெனப்படிப்பார்அறியுமாறுசெய்யப்படுவதாகியசெய்யுளுறுப்பு; அரிமா; சீக்கிரிமரம்.

உணர்ந்த - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

வளை - சுற்றிடம்; சங்கு; கைவளை; சக்கரப்படை; துளை; எலிமுதலியவற்றின்பொந்து; நீண்டமரத்துண்டு; தூதுவளைஎன்னும்கொடிவகை; சிறியஉத்திரம்.

முழுப்பொருள்
குளிர்ந்த நீர்ப்பரப்பின் தலைவன் என்னுடன் கூடியப்பின்பு பிரிந்துவிட்டான் தலைவி கூறுகிறாள். ஆனால் அவன் பிரியப்போகிறான் என்பதை தன்னை காட்டிலும் தான் அணிந்துள்ள வளையல்கள் முன்னமே அறிந்துள்ளன என்கிறாள் தலைவி. 

இது தலைவியின் யூகமாவே இருக்க முடியும். ஏனெனில் கூடும்பொழுது அறிந்திருந்தாலும், வளையல்கள் கழன்று விழ அவள் உடம்பு வருந்தி மெலிந்திருக்க வேண்டும். அப்படியெனில் தலைவி தானே முதலில் அறிந்தாள். அல்லது கூடலின் பொழுது தலைவனின் மெல்லிய அசைவுகளுக்கு ஏற்ப வளையல்களின் ஓசை இருக்கும் எனில் தலைவியின் ஊகம் சரி எனலாம். ஏனெனில் தலைவன் பிரியப்போகிறான் என்றால் அது அவனுக்கு தெரியும், அப்படி இருக்கும் பொழுது அவன் உடல் மொழி மாறுபடும். ஆதலால் கூடல் வித்தியாசமாக இருக்கும். அதனால் உடலின் அசைவுகள் மாறுபட்டு அதனால் வளையல்களின் ஓசையும் மாறுபடும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.

மு.வரதராசனார் உரை
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!.

சாலமன் பாப்பையா உரை
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

No comments:

Post a Comment