மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்

குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

யான் - தன்மையொருமைப்பெயர்

மற்றியான் - நான் அவ்வாறு எண்ணுதலை தவிர்த்து (பின்னால் வரப்போவது)

என் - என்னுடைய

உளேன் - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன்

என்னுளேன் - என்னுளே உயிருடன் 

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

அவர் -  அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்;  ஒருவரைக்குறிக்கும் பன்மைச்சொல்.

அவரொடு -அவர் உடன் 

யான் - தன்மையொருமைப்பெயர்

உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு

உள்ள uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  

உளேன் - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன்

முழுப்பொருள் 
தலைவனின் பிரிவு தரும் துன்பத்தை தாங்க முடியாமல் வாடும் தலைவியை கண்டு தோழி கேட்கிறாள் "எப்படி நீ இவ்வளவு துன்பத்தை பொறுத்துக் கொண்டு உயிர் வாழ்கிறாய்?".  அதற்கு தலைவி கூறுகிறாள் "அவர் பிரிவார் என்று எனக்கெப்படி டீ தெரியும்? அவர் என்னுடன் இருந்த நாட்களும் கூடிய தருணங்களும் பழகிய காலங்களும் நினைவுகளாக உள்ளன. அவற்றை நினைத்து நினைத்து உயிர் வாழ்கிறேன்". 

நினைவுகள் வாழ்க ஏனெனில் நினைவுகள் வாழவைக்கின்றன.

கிருஷ்ணாவதாரத்தில் ராதையிடம் அவள் தோழி, அடீ! இதோ கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு, துவாரகைக்குப் போகிறானே உன்னைவிட்டு! நீ வருந்தவில்லையா என்கிறாளாம். அதற்கு ராதை, போகட்டுமே, கிருஷ்ணன் நினைவொன்றே, அவனோடு நானும் மற்ற கோபியரும் இந்த பிருந்தாவனத்தில் கூடி இருந்த நாட்களின் நினைவுகளே நான் உயிர்த்திருக்கப் போதுமானது என்பாளாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.

சாலமன் பாப்பையா உரை
அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.

No comments:

Post a Comment