நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்

மறப்பது - மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

அன்று - அல்ல, இல்லை, அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்

நன்று  - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

அல்லது - தீவினை; தவிர

அன்றே - அன்று ; அந்நாள் ; அப்பொழுதே 

மறப்பதுமறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
பிறர் நமக்கு உதவி செய்தால் நன்றியுடன் இருத்தல் வேண்டும். ஏனெனில் உதவி அரிதானது. ஆதலால் நன்றியை மறப்பது சிறப்பாகாது. நன்றியை மறப்பது அறம் ஆகாது. நன்றியை மறப்பது நன்மை/இன்பம் பயக்காது.  நன்றியை மறப்பது வாழ்வின் நோக்கமாக இருக்கக்கூடாது. நாம் நன்றியை மறந்தால் நமக்கு மற்றவர்கள் வேறு உதவியை புரிய விரும்பி முன்வரமாட்டார்கள். நல்லவற்றை நினைத்து நினைத்து வளர்த்துக்கொள். நன்றியை மறக்காமல் இருந்தால் பிறருக்கு உதவ நம் மனம் ஏங்கும்.

அதுவே நட்பில் நன்மை அல்லாதவற்றை அன்றே/அப்பொழுதே மறப்பது நன்மை பயக்கும். நன்மை அல்லாதவற்றை வேரிலேயே (முளைக்கும் பொழுதே) வெட்டிவிடு. ஏனெனில் நன்மை அல்லாதவை அது தீமையை துன்பத்தையும் சலனத்தையும் மனதில் உருவாக்கும். பிற நல்லவரையும் முழுமனதாக நம்ப விடாது. நமது செயல்திறனையும் கவனத்தையும் ஊக்கத்தையும் குறைக்கும். நிம்மதியை இழப்பாய். பகைக்கூட தோன்ற வாய்ப்புண்டு. (பகை தோன்றினால் முகத்தில் சிரிப்பும் மனதில் மகிழ்ச்சியும் அழிந்துவிடும்). இக்குறள் எல்லா உறவுகளிலும் நட்பிலும் மிக மிக உதவும். நட்பு அல்லாதவற்றில் கூட பகையில் உதவும் ஏனெனில் நல்லது அல்லாதவற்றை மனதில் வைத்தால் வஞ்சம் தான் வளரும். அது விஷம். அது குப்பை. துர்நாற்றம் அடிக்கும். ஆதலால் அதனை அன்றே மறந்தால் நமக்கு நிம்மதி. கவலை பட ஒரு பிரச்சனை கம்மி (one problem less to worry about). 

“ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது போல, தீங்கு நினைப்பவர்களிடத்தில் பொறுமையைக் கடைபிடிக்கும் நல்ல குணத்தினருக்கு, நட்பு வலுப்படும். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்று வள்ளுவரே கூறியிருப்பதால், தீங்கை மறத்தல் நல்லது என்பதால், அதுவே இன்னா செய்தாரை தண்டிக்கும், அவர்கள் மனசாட்சியை உறுத்தக்கூடியதாக இருக்கும். பொறுத்தலைக் விட மறத்தல் சிறந்ததென பொறையுடைமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார், இவ்வாறு: “பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று”. 

மறக்கச் சொல்வதில், ஒரு உளவியல் நிலைப்பாடும் தெரிகிறது. பொறுமை என்ற பெயரில் அடக்கிவைத்து, ஆத்திர ஊற்றாகப் பெருக்கெடுப்பதைவிட மறந்துவிட்டால், உள்ளே புகைந்திகொண்டிருப்பது எரிமலையாயிராது என்பதனால் மறத்தலை இரு இடங்களிலும் வற்புறுத்தியது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உதவி செய்தோர்க் குதவா ராயினும்
மறவின்மை மாண்புடைத்து” குறள் 152

பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது


உண்மையில் பிரிந்து செல்வதற்கான உளநிலை எப்போதும் அவர்களிடமுள்ளது. ஒரு பண்பாட்டியல்பு அல்லது பழக்கம் வேறுபட்டால்போதும் அதையே பிரிந்து செல்வதற்கான நெறியென உடனே எடுத்துக்கொள்வார்கள். ஒரே குலத்தை, ஒரே குடியைச் சேர்ந்த யாதவர்கள் உண்ணும்போது ஒருசாரார் முதலில் மதுவை உண்ணவேண்டும் பிறிதொரு சாரார் முதலில் இனிப்பு உண்ணவேண்டும் என வகுத்து ஐந்தாண்டுகாலம் அதை கடைப்பிடித்தால் சில ஆண்டுகளுக்குள் அவர்கள் இரு பிரிவினராக ஆவது உறுதி. அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

பிரிந்து செல்லும்போது அவர்கள் செல்வங்களை ஈவிரக்கமில்லாது பகுத்துக் கொண்டாகவேண்டும். அதைவிட நினைவுகளை பகுத்துக்கொள்ளவேண்டும். அது எளிதல்ல, அதற்கு அவர்கள் கண்டறிந்த வழி என்பது பூசல். மிகச்சிறிய தருணங்களைக்கூட எளிதில் பூசலாக்கிக்கொள்ள முடியும். அதிலும் ஒரு பொதுவிழாவில் பூசல் எளிதில் வெடிக்கும். ஏனென்றால் அங்கு அத்தனைபேரும் தங்கள் இடம்குறித்த பதற்றத்துடன் இருப்பார்கள். தங்களை தங்கள் உண்மையுருவைவிட மேலாகக் காட்ட முயன்றுகொண்டிருப்பார்கள். ஒருவனை சற்றே புண்படுத்தினால்போதும், அவனுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள அத்தனைபேரும் கிளர்ந்தெழுவார்கள்.

ஒருமுறை ஒருவன் சிவப்புத் தலைப்பாகை வைப்பதைப்பற்றி ஒரு வசையை சொன்னான். சிவப்புத் தலைப்பாகை அணிந்த அத்தனைபேரும் அவனுக்கு எதிராகத் திரண்டனர். பிறவண்ணத் தலைப்பாகை அணிந்தோர் அவனை ஆதரித்தனர். இரு கூட்டமாக எதிரெதிர் நின்று வசைபாடினர், பூசல் தொடங்கியது.” என்றார் இளைய யாதவர். புன்னகையுடன் “ஒரு குமுகச் செயல்பாட்டை அல்லது பண்பாட்டு நுட்பத்தைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த வழி அதை முடிந்தவரை பொருளற்றதாக விளக்கிக்கொள்வதே என்று படுகிறது” என்றார்.

ஷத்ரியர்களின் பூசலை பார்த்திருக்கிறேன், அது கொலையிலேயே முடியுமென அனைவரும் அறிவார்கள். ஆகவே அனைவரும் அதை தொடக்கத்திலேயே நிறுத்திவிட உள்ளம்கொண்டிருப்பார்கள். மூத்தவர்கள் உரியதருணத்தில் தலையிடுவார்கள். ஆனால் யாதவர்களின் பூசல்களில் உச்சமே தடியால் அடித்துக்கொள்வதும் கல்வீசுவதும்தான், எவரும் இறப்பதில்லை. அதை ஒரு உளஎழுச்சிகொண்ட களியாட்டாக அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்றே தோன்றும். மூத்தவர்கள் வெறுமனே நோக்கி நிற்பார்கள்.

அரசே, யாதவ மூத்தவர்களைப்போல பூசல்களை ஒடுக்கத் தெரியாத குடித்தலைவர்களை நான் கண்டதே இல்லை. ஏனென்றால் அவர்கள் உள்காடுகளில் தனித்து வாழ்பவர்கள். ஆண்டுக்கொருமுறையோ இருமுறையோதான் அவர்கள் திரளை பார்க்கிறார்கள். அயலாரிடம் பேசவே அவர்கள் தயங்குவார்கள். கூட்டம் அவர்களை முற்றிலும் செயலற்றதாக்கிவிடும். அவர்கள் பூசல்களில் நத்தையென உட்சுருங்கிவிடுவதை கண்டிருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “இறப்பு இல்லையென்பதனாலேயே யாதவர்களின் பூசல்கள் மேலும் வன்முறை கொண்டவை. ஷத்ரியர்களின் பூசல் இறப்புகளில் எப்படியோ முடிந்துவிடுகின்றது. இறப்பு அப்பூசல்களின் பொருளின்மையை உடனடியாக பேருருக்கொண்டு காட்டிவிடுகிறது. அது உருவாக்கும் துயர் அப்பூசல் உருவாக்கிய கசப்புகளை உருகச் செய்துவிடுகிறது.

யாதவர்களின் பூசல் முற்றிலும் சொல்சார்ந்தது. குருதியும் வலியும் இல்லை என்பதனாலேயே அது நிறைவுகொள்வதில்லை. மேலும்மேலுமென தாவுகிறது. உடல் செல்வதற்கு எல்லையுண்டு, அது பொருள். சொல் செல்வதற்கு எல்லையில்லை, அது வெளி. சிறுமைகளின் உச்சம், இழிவுபடுத்தலின் இயலும் எல்லை. அதன்பின் ஒருபோதும் அவை மறக்கப்படுவதில்லை. நாவினால் சுட்டவடு ஆறுவதில்லை. உண்மையில் ஆற அவர்கள் விடுவதுமில்லை. ஏனென்றால் அச்சொற்களினூடாகவே அவர்கள் தங்களை வேறுபடுத்திக்கொள்கிறார்கள். தங்கள் தன்னடையாளத்தை அவ்விலக்கம் வழியாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். அக்கசப்பை இழந்துவிட்டால் அவர்களிடம் எஞ்சுவது ஏதுமில்லை.

தலைமுறைகளுக்கு அவற்றை கைமாற்றுகிறார்கள். சொல்லிப்பெருக்கி தொன்மங்களாக்கிக் கொள்கிறார்கள். பிறவெறுப்பும் தன்னிரக்கமும் ஒன்றின் இருபக்கங்கள். இரு உச்சநிலைகளிலாக மாறிமாறிச் செல்லும் ஒருவரிடம் பேச நம்மிடம் ஏதும் இருப்பதில்லை. அரசே, சென்ற சிலமாதங்களாக நான் யாதவர்குடிகள் தோறும் சென்றுகொண்டிருந்தேன். கொந்தளிப்பின்றி நான் கண்ட எவருமில்லை. முதலில் அவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெருங்குலங்களாகச் சேர்ந்து வாழாமையால் அவர்கள் அதற்கான உளநிலைகளை கற்றுக்கொள்ளவில்லையா? அல்லது, பெருநிலம் நிறைந்து வாழ்பவர்களால் எப்போதும் ஒதுக்கப்பட்டு காடுபுகுந்து வாழநேர்ந்தமையின் தன்கசப்பா?

பின்னர் எப்போதோ தோன்றியது, அவர்கள் வாழும் அக்காட்டுத்தனிமையில் அவ்வண்ணமல்லவா மானுடர் உடனிருக்கமுடியும் என்று. அவர்களுக்கு உலகம் தேவைப்படுகிறது, அதனுடன் வீச்செழுந்த உளத்தொடர்பு வேண்டியிருக்கிறது. அது அன்போ வெறுப்போ. அன்பு அனைவர்மேலும் இயல்வதல்ல. அதற்கு அணுக்கம் தேவையாகிறது. எளியோருக்குக் குருதியே இயல்பான அணுக்கம். யாதவர்கள் தங்கள் மைந்தர்மேல் கொண்டிருக்கும் பேரன்பு திகைப்பூட்டுவது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் என அவர்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேரன்பு அக்குருதிவட்டத்திற்குள்தான். அதற்கு வெளியே விரிந்திருக்கும் மானுடவெளியுடன் அவர்கள் வெறுப்பால்தான் ஆழ்தொடர்புகொள்கிறார்கள்.

அத்தனை பேரன்புகொண்டவர்கள், விருந்தினர் மேல் குளிர்மழையாகப் பெய்பவர்கள், கள்ளமற்ற எளிய உள்ளமும் நேரடியான பேச்சும் கொண்டவர்கள் எப்படி அந்த அளவுக்கு வெறுப்புகொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விடை அதுவே. எளிய உள்ளம் கொண்டவர்கள் புரிந்துகொள்ளவும் எளிதானவர்கள் என்பதைப்போல பிழை பிறிதில்லை. அவர்களின் வெளிப்பாடுகளே எளிமையானவை. ஏனென்றால் அவற்றை சிக்கலாக ஆக்கிக்கொள்ளும் அறிவுத்திறன் அவர்களிடமில்லை. அவர்களின் ஆழுள்ளம் இப்புவியின் இயல்பான எதைப்போலவும் சிக்கலான பெருவலை. அதைத் தொட்டு நீவி புரிந்துகொள்வதற்குத் தேவையானது தெய்வங்களின் விழி.”

பரிமேலழகர் உரை
நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லதை நினைவில் கொள். அல்லதை விலக்கு.

English Meaning - As I taught a kid - Rajesh
Forgetting the help done by others is not a good thing because it is ungratefulness. But forgetting a bad thing done to you is very important. Forgetting bad things and forgiving is good for you because carrying hatred and resentment kills you from inside. 

How?? A friend may have done something very bad to you such even trying to kill you or betray you. You should forget them. You can forgive him by thinking of at least one good thing he has done for you and forgive him. 

Questions that I ask to the kid
What should you forget immediately on that day itself  Why?

No comments:

Post a Comment