சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

குறள் 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
சுழலும் - சுழலுதல் - உருளுதல்; வட்டமாகச்சுற்றுதல்; சுற்றுத்திரிதல்; அலைவுபடுதல்; சஞ்சலப்படுதல்; சோர்தல்; பொறிமயங்குதல்

இசை  -இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

வேண்டி - vēṇṭi   prep. id. For thesake of; பொருட்டு. அதை எனக்கு வேண்டிச் செய்.
வேண்டிக்கேள்-தல் [வேண்டிக்கேட்டல்] vēṇṭi-k-kēḷ-, v. tr. id. +. To beseech;மன்றாடிக்கேட்டல். (யாழ். அக.)

வேண்டா - வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not  

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உயிரார் - உயிர் உள்ளவர் 

கழல் - வீரக்கழல்; சிலம்பு; கால்மோதிரம்; செருப்பு; பாதம்; கழற்சி; காற்றாடி; பொன்வண்டு.

யாப்புக் - கட்டுகை; கட்டு; செய்யுள்; யாழ்ப்பத்தரிற்குறுக்கேவலிவுறச்செய்யுங்கட்டு; சிறப்புப்பாயிரஇலக்கணம்பதினொன்றனுள்இன்னநூல்கேட்டபின்இன்னதுகேட்கத்தக்கதென்னும்தொடர்பு; அன்பு; உறுதி; சூழ்ச்சி; பொருத்தம்; பாம்பு.

காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

நீர்த்து - நீர்த்தல் -  நீராதல்; ஈரமாதல்.

முழுப்பொருள்
இவ்வுலகில் எட்டுத்திக்கும் சுழலும் ஆற்றல் பெற்ற புகழை வேண்டி தன் உயிரை வேண்டாத படை வீரர்கள் தங்கள் உடம்பில் (தங்கள் கால்களில்) அணியும் சிலம்பு(வீரக்கழல்) அவர்ளுக்கும் அவர்கள் வீரத்திற்கும் அழகு சேர்க்கும் குணம் வாய்ந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.).

மணக்குடவர் உரை
பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து. இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

No comments:

Post a Comment