அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அற்றுஅத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றவர் - இல்லாதவர் 

என்பார் - என்று கூறுவார்

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர்

மற்றையார் - மற்றவர்கள் 

அற்று - இல்லாது 

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

அற்றது - அறுத்தவர் 

இலர் - வேறு இல்லை 

முழுப்பொருள்
என்னிடம் ஏதும் இல்லை என்று கூறிக்கொள்பவர் உண்மையில் அவரிடம் பொருள்கள் ஏதும் இல்லையென்றாலும் உண்மையில் ஏதும் இல்லையென்றால் அது எதன் மீதும் ஆசையில்லாது இருக்கும் நிலையே ஆகும். ஆதலால் ஆசையில்லாதவரே உண்மையில் ஏதும் அற்றவர். மற்றவர்களுக்கு ஏதாவது பொருளோ அல்லது ஆசையோ இருக்கும். .

வீடுபேறு நோக்கிய பயணத்தில் ஒருவர் பல விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் பயணும் கிட்டும். ஆனால் வீடுபேறு அடைய ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதம் அவா அறுத்தல். அதுவே பிறவித்துன்பதை விலக்கும். மற்ற விரதங்களை கடைப்பிடித்துவிட்டு அவா அறுத்தலை கடைப்பிடிக்கவில்லை என்றால் வீடுபேறு கிட்டாது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.

மு.வரதராசனார் உரை
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

No comments:

Post a Comment