எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

குறள் 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எல்லாப்முழுதும்; விளிப்பெயர்; முன்னிலைப்பெயர்.

பொருளும்  - பொருள் சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

உடைத்தாய் - உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

இடத்துஇடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

உதவும் - உதவு-தல் - utavu-   5 v. [T. K. odavu, M.utahu.] tr. 1. To give, contribute, as one'smite; கொடுத்தல் ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி,218). 2. To help, aid, assist; துணைசெய்தல்.நம்மாட்டுதவிய நன்னர்க்கு (பெருங். வத்தவ. 3, 11). 3. Towithstand, as an invading army; தடுத்துநிற்றல்.இடத்துதவு நல்லா ளுடைய தரண் (குறள், 746). 4.To report, tell, inform; சொல்லுதல் அன்னையர்க்குதவல்வேண்டும் (கல்லா. 40).--intr. 1. To bepossible; கூடியதாதல். உதவியதேதும் பெரியோர்க்கூட்டி (சைவச. பாயி. 19). 2. To be of use; பயன்படுதல் இது மருந்துக் குதவும்.  

நல்லாள்குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர்.

உடையதுசெல்வமாக கொண்டது; கொண்டது

அரண்பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 


நல்லாள் என்றால் குணத்தில் சிறந்து என்ற பொருள் பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் குணம் தகுதி பயிற்சி ஆகியவற்றியில் தக்கவர் என்ற பொருள் இக்குறளுக்கு பொருந்தும்.

ஒரு நாட்டில் போருக்கு தேவையான படைக்கலன்கள், உணவு பொருட்கள், ஊர்திகள், விலங்குகள் மற்றும் இதர பொருட்களை தன்னகத்தே உடையதாகவும், போர்காலங்களில் நாட்டிற்குள்ளே தேவைப்படும் உணவு மற்றும் அன்றாட வணிகம் போன்றவற்றுக்கு தேவையானவற்றை உடையதாகவும், போரின் பொழுது எதிரியை வீழ்த்தும் வலிமையையும் வீரத்தையும் அதற்குண்டான பயிற்சியும் மற்றும் அரசரின் வியூகத்தை செவ்வென செயலாற்றும் தன்மை கொண்ட தக்க வீரர்களை உடையதாவும் இருப்பதே நாடு. மேற்சொன்னவையே ஒரு நாட்டை பாதுக்காக்கும் அரணாகும்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.).

மணக்குடவர் உரை
எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.

மு.வரதராசனார் உரை
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

English Meaning - As I taught a kid - Rajesh
A country may have all resources (especially the equipments in military/army, navy, air force, human resources etc) in sufficient or in abundance. But it would serve as a fort/strength/protection only if they are in excellent condition and the human resources are well trained and can fight against enemies and win them. This doesn't apply only to military, it also applies to all industries, families etc. Basically QUALITY is very important not just QUANTITY.

Questions that I ask to the kid
What is more important than having all resources? Why?
Quality is very important than quantity. Why?

No comments:

Post a Comment