வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு

குறள் 726
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
வாளொடு - வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) 

அல்லார்க்கு  - அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))


நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.


நூலோடு - நூல் அறிவோடு

என் என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நுண் - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.


அஞ்சு - ஐந்து; அச்சம் ஒளி

அஞ்சுபவர்க்கு -  அஞ்சுபவர் / பயப்படுபவர்

முழுப்பொருள் 


எதிரிகளை கொல்லக்கூடிய கூர்மையான வாள் கையில் இருந்தும் மனதில் வீரமில்லையென்றால் போர்க்களத்திற்கு சென்று ஒரு பயனுமில்லை. அதுப்போல நூல்கள் பல கற்றிருந்தாலும் கற்றோர்கூடிய அவையில் பேச நெஞ்சில் தைரியம் இல்லையென்றால் (அதாவது கற்றோர்கூடிய அவையை கண்டு அச்சம்) எவ்வளவு கற்று என்ன பயன் ? ஒரு பயனுமில்லை.

இன்னா நாற்பது (8), வீரமிலார் கை படைக் கருவியைப்பற்றி, “ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா” என்று சொல்கிறது. 

திரிகடுகம் (7) இதேபோன்று, 
“பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அரு நூலும், இம்மூன்றும் 
துஞ்சூமன் கண்ட கனா” என்கிறது


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.

No comments:

Post a Comment