எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எண்ணியார் - எண்ணங்கொண்டவர், நோக்கங்கொண்டவர்.

எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.

இழப்பர் - இழப்பார்கள்

இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம் இருப்பவன்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

துன்னியார் - அடுத்தோர்; நண்பர்

துன்னிச் - துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

செயின் - செய்தால் / / செய்ய வேண்டும்

முழுப்பொருள்
ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது (/முன்பு) அதனை நன்கு ஆராய்ந்து அதற்கு வரக்கூடிய இடர்களையும் அதனை செய்யவேண்டிய தக்க காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து செய்வார் என்றால் அவரை வெல்லவேண்டும் என்று எண்ணிய பகைவர் அவ்வெண்ணத்தை கைவிடுவார்/இழந்துவிடுவார். ஏனெனில் அவ்வாறு எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்வோரை வெல்வது (அல்லது தோல்வியடையச் செய்வது) மிக அரிது/கடினம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.
(அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person/king rightly does a task by researching and analyzing all the attributes of the task w.r.t place/location, timing, channel, hurdles, resources etc., then an dismissive opponent who thought or wants to go against the king will drop/loose that thought /plot. Because they know that it is very difficult to defeat a person who thinks through in all directions including right place and does the task rightly.

Questions that I ask to the kid
When does a opponent loose a thought to defeat a person? Why?

No comments:

Post a Comment