குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
ஆம் - ām part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம். ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.
எல்லாஅம் - ellām n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.
தீய - தீமையான; போலியான
ஆம் - ām part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம். ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
தீயவும் - தீமையான; போலியான
நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான.
ஆம் - ām part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம். ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
செயற்கு - செய்வதற்கு
முழுப்பொருள்
நற்செயல்கள் செய்வதற்கும் செல்வம் ஈட்டுவதற்கும் எல்லா சூழ்நிலைகளும் (அதாவது திட்டம், இடம், காலம், மனித வளம் போன்ற சூழ்நிலைகள்) சரியாக அமைந்தாலும் ஊழ் தீயதாக அமைந்திருந்தால் அச்செயலில் வெற்றிகொள்ளவோ அல்லது செல்வம் ஈட்டவோ முடியாது. அதேப்போல் நம்முடைய சூழ்நிலைகள் சரியாக இல்லையென்றாலும் ஊழ் நமக்கு சாதகமா இருந்தால் நமக்கு அச்செயலில் வெற்றியும் செல்வமும் கிட்டும். அதுவே ஊழின் வலிமையாகும்.
ஊழானது நாம் செய்யும் கர்மத்தின் (காரியத்தால்) பலன்களால் வரும். இப்பிறவியில் செய்யும் கர்மம் இப்பிறவியிலேயே பலனை காண்பிக்கும் அல்லது அடுத்தபிறவியிலும் ஊழாக வரும்.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட “ஊழ்வினை உறுத்து வந்தூட்டலை” நினைவு கொள்ளவேண்டும்.

பி.கு: எனக்கு இன்னொரு அர்த்தமும் தோன்றுகிறது. நமக்கு நடக்கும் நல்லவையெல்லாம் நன்மைக்கு என்று அர்த்தமில்லை. அது ஒரு விதத்தில் தோல்வியை தள்ளிப்போடுகிறது. அதனை அப்பொழுது எதிர்க்கொள்வது கடினமாகக்கூட இருக்கும். அந்நிலையில் செல்வம் ஈட்டுவது கடினமாக இருக்கும். அதலால் அது தீதே. ஆதலால் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருக்காது என்று உணர்ந்து உழைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுப்போல் இன்று நமக்கு வரும் தீயவை நமக்கு பல துன்பங்களை தரலாம் ஆனால் அவையெல்லாம் நன்மைக்கே. அந்தக் கடினமான காலங்களை கற்பதற்கான பக்குவமடைவதற்கான காலமாக உணர்ந்து உழைத்தால் நன்மைகள் வரும்பொழுது அது நெடுங்காலம் நிலைத்து நிற்க ஏதுவாக இருக்கும். நல்லவைப்பின் தீதும், தீயவற்றின் பின் நன்மையும் ஒருவரின் தலைவிதி அல்லது ஊழ் என்று ஒருவர் உணரவேண்டும். ஊழை மதித்து வெற்றியில் மமதை கொள்ளாமல் தோல்வியில் சோர்வு கொள்ளாமல் செயல்லாற்றவேண்டும்
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”நன்மையும் தீமையன்றோ நாசம்வந்துற்ற போது” (கம்ப.மாரீசன்.202)
பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.
மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.
மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
Thirukkural - Management - Fate
When your fate is against you, all positive intentions, behavior, and efforts will result in negative consequences. However, when your fate is favorable to you even negative intentions, behavior, and efforts will result in positive consequences, reveals Kural 375. When you reflect on this Kural, you will have many personal incidents to prove the validity of the thought in the Kural.
Favorable means prove adverse, adverse help
When fate intervenes.
When your fate is unfavorable to you, that will make you lose all your wealth and knowledge and prevent you from putting in sincere efforts. Whereas, when your fate is favorable to you that will make you gain more wealth, knowledge, and help you put in sincere efforts.
English Meaning - As I taught a kid - Rajesh
When we want to do good work, earn money even if all the circumstances (i.e., plan, place, time, resources, human resources etc.) happens correctly, if the fate is bad, we might not be successful or earn the money. At the same time, some times even if our circumstances doesn't happen correctly, we might still succeed in our task and earn money. That is because of fate.
Fate comes because of our karma. Karma can show its effect in this birth itself or in next birth.
Also, one has to understand that if we are continuously succeeding it doesn't mean it is because of us/you (so don't have the ego that it is because of you), our fate could just be postponing our failure. So, we need to be humble and do our work sincerely in the present and future. if one is failing it can be because of us and it can be because of fate too. So, don't get bogged down. Do your work sincerely. Your efforts will succeed one day.
Questions that I ask to the kid
Even if circumstances are favourable, it turned out harmful? Why? How should I react?
Even if circumstances are not favorable, it turned out beneficial? Why? How should I react?
Even if circumstances are not favorable, it turned out beneficial? Why? How should I react?
No comments:
Post a Comment