உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

குறள் 993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

ஒத்தல் - நடு; பொருத்தல்; ஒத்துதல்; தகுதியாதல்; ஒற்றுமைப்படுதல்; கேள்வியால்தெளிந்தவற்றில்மனம்ஊன்றிநிற்கை

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

அன்றால் - அல்ல

வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

தக்க -தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.
தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல்.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

ஒத்தல் - நடு; பொருத்தல்; ஒத்துதல்; தகுதியாதல்; ஒற்றுமைப்படுதல்; கேள்வியால்தெளிந்தவற்றில்மனம்ஊன்றிநிற்கை.

ஒப்பது - ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

முழுப்பொருள்
வெறுத்தக்க என்ற சொல் ஓரளவுக்கு குழப்புவது உண்மைதான். இதற்கு தொல்காப்பிய சூத்திரமாகன, “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” என்பதற்கு இளம்பூரணம் எழுதிய உரை துணைகோளாக இருக்கிறது. புறநானூற்றுப்பாடல் 53ல், “வெறுத்த கேள்வி, விளங்கு புகழ் கபிலன்” என்று இளங்கீரனார் பாடுவதைப் பொருள் செய்கையில், “வெறுத்த” என்ற சொல்லுக்குச் “செறிந்த” என்று இளம்பூரணர் தொல்காப்பியத்தைச் சுட்டி பொருள் செய்துள்ளார்.

மனிதர்களும் விலங்குகளில் ஒன்று தான். ஆனால் மனிதன் விலங்குகளில் இருந்து தன்னை வேறுபடுத்தி தன்னை ஒரு படி உயர்வாக கருதுகிறான். ஒவ்வொரு விலங்குக்கும் ஒருவகை உருவ ஒற்றுமை இருக்கிறது அதன் அடிப்படையில் யானை புலி சிங்கம் என நாம் பலவாரு விலங்குகளை வரையறை செய்கிறோம். அதேபோல மனிதர்களுடைய உறுப்புகளின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை மனிதர்கள் என்று கூறிக்கொள்கிறோம்.

ஆனால் இப்படி உறுப்புகளின் தோற்ற ஒற்றுமையால் விலங்குகளில் இருந்து மனிதர்கள் வேறுபட்டவர்கள் அல்லது மனிதர்கள் ஆகா மாட்டார்கள். மனிதர்கள் (விலங்குகளில் இருந்து மாறுபட்டு) மனிதர்கள் ஆவது செல்வமாக கருதப்படும் நற்பண்புகளை தன் தகுதியாக/தன்மையாக கொண்டு ஒழுகினால் தான். நற்பண்புகளல்லாதவர் மற்றொரு விலங்கு காட்டுமிராண்டி அல்லது மிருகம் என்றும் பண்பல்லாதவர்கள் இவ்வுலகில்  அழைக்கப்படுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல். (வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.) .

மணக்குடவர் உரை
செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின் அது பொருந்துவதன்று; இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல்.

மு.வரதராசனார் உரை
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.

No comments:

Post a Comment