ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

குறள் 835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
ஒருமைச் - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு;

வீடுபேறு - முத்திநிலை

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

புக்கு - pukku   n. Paper-tree; பிராய். (பிங்.); pirāy   n. Paper-tree, s. tr., Streblusasper; மரவகை.
பிராயச்சித்தசமுச்சயம் pirāyaccitta-camuccayam, n. A Tamil work on pirāyaccit-tam, 17th C.; பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிராயச்சித்தங்களைக்கூறும் தமிழ் நூல்.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்

அழுந்தும் - அழுக்குண்ணுதல்; உறுதியாகப்பற்றுதல்; உறுதியாதல்; பதிதல் அமிழ்தல் அனுபவப்படுதல்; வருந்துதல்;ஆழ்தல்; தோய்தல்

அளறு - குழைசேறு; குழம்பு காவிக்கல் நீர் நரகம்

முழுப்பொருள்
பேதைகளின் இயல்பு என்ன ?
ஏழுபிறவியில் புகுந்து அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் ஒரேபிறவியில் பல தீய செயல்களை அறிவற்றவர்கள் போல செய்து அதன் தீ பலன்களை துன்பங்களை நரகமெனும் சேற்றுப்புதையில் அமிழ்ந்து அனுபவிப்பதுபோல அனுபவிப்பர்.  சேற்றுபுதையலில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் அதற்கு அறிவும் எண்ணமும் முயற்சியும் தேவை. இவையில்லாதோர் பேதை. இவர்களை யாரும் வந்து காப்பாற்ற முடியாது. ஏனெனில் இவர்களுக்கு உதவ கைகொடுத்தாலும் அதனைப் பற்ற கைகொடுக்கமாட்டார்கள்.

துன்பங்களை குறைத்துக்கொள்ள வல்லவர் அறிவுடையோர். துன்பங்களில் உழன்று துன்பங்களை பெருக்கிக்கொள்வோர் அறிவில்லாத பேதையர்.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

மு.வரதராசனார் உரை
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

No comments:

Post a Comment