உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

குறள் 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
உள்ளுவன் - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

யான் - தன்மையொருமைப்பெயர்

உரைப்பது - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

அவர் - அவருடைய

திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

ஆல்  - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.

கள்ளம் -  வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு

பிறவோ - பிறவு - பிறவி - பிறப்பு; உடன்பிறந்தவர்; இயல்பு; மறுபிறப்பு.

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

முழுப்பொருள்
தலைவி தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது அப்பிரிவை சமாளிக்க அவள் கையாண்ட முயற்சிகள் என்றால்

1) தலைவனைப் பற்றியே மனதார நினைத்துக்கொண்டு இருந்தாள். அவர்கள் ஒன்றாக பழகிய காலங்களை அசைப்போட்டுக் கொண்டிருந்தாள் அவர்கள் ஒன்று சேர்ந்து வாழப்போகிற காலங்களை கற்பனை செய்துக்கொண்டிருந்தாள்

2) தலைவனின் அருமைப் பெருமைகளையும் சிறப்பானத் திறமைகளைப் பற்றியேப்  பேசிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் முயற்சிகள் அவளை வஞ்சித்துவிட்டது. ஏனென்றால் இவள் செய்வதெல்லாம் பசப்பு / பாசாங்கு. ஏமாற்றுவேலை. அவள் உள்ளுக்குள் ஆழ்மனதில் தலைவனின் பிரிவினால் வாடுகிறாள். அத்துன்பம் அவள் மேல் பசலை நோயாக படர்ந்துவிட்டது. உண்மை வெளிவந்துவிட்டது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

சாலமன் பாப்பையா உரை
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.

No comments:

Post a Comment