உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

குறள் 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
உழவு - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை.

உழுவார் - உழவர்--உழவோர், s. Ploughmen, cultivators, agriculturists, husbandmen, inhabitants of agricultural districts, மருதநிலமாக்கள். 2. The fourth or Vellale caste, வேளாளர். 3. (p.) [ex உழப்பு.] War riors, heroes, படைவீரர்.

உலகத்தார்க்கு - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்.

ஆணி - இரும்பாணி; அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு; எல்லை

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாது - செய்யாது இருத்தல் 

எழுவுதல் - எழுப்புதல், எழச்செய்தல்; ஓசையுண்டாக்குதல்.

எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல்.

எழுவாரை - மற்ற தொழில்களை செய்வோரை

எல்லாம் - முழுதும்

பொறுத்து - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

முழுப்பொருள்
நிலத்தை உழுது பயிர் விளைவித்து இவ்வுலக மக்களுக்கு உணவுக்கு தேவையான பொருட்களை (தானியங்கள், காய்கறிகள், பழங்கள்) வழங்குவோர் உழவர்களே. உணவு இல்லையென்றாலும் அதனை விளைவிக்கிற உழவர்கள் இல்லையென்றாலும் இவ்வுலக மக்களால் இயங்க முடியாது. ஆதலால் ஊர்திக்கு அச்சாரம் போன்று இவ்வுலக மக்களுக்கு உழவர்கள் ஆதரமானவர்கள்.

அகழ்வாரை எப்படி இவ்வுலகம் பொறுமையாக தாங்குகிறதோ அதுப்போலவே இவ்வுழவு தொழிலை ஆற்றாது பிற தொழில்களை செய்வோரையும் உழவர்கள் பொறுமையாக தாங்குகின்றனர்.

அறிவாளிகள் இல்லை என்றாலும் இவ்வுலகம் இயங்கும். ஆனால் உழவர்கள் இல்லை என்றால் இவ்வுலகம் இயங்காது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர். ('காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு' என்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் 'ஆணி' என்றார். 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே: அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார். இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

No comments:

Post a Comment